குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் பருகக்கூடிய ஆரோக்கிய பானமாக பால் இருந்து வருகிறது. உடலுக்குத் அத்தியாவசியத் தேவையான கால்சியம் சத்து பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. ஆனால் சமீப காலமாக பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பது என்பது ஒரு புதிய டிரெண்டாகவே மாறியிருக்கிறது.
பாலுக்கு மாற்றாக வேறு ஆரோக்கிய பானங்களை குடிக்க வேண்டும் என்பது பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது. பாலுக்கு மாற்றாக வேறு ஆரோக்கிய பானத்தை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கானது!
பால் மற்றும் பால் பொருட்களுக்கு மாற்று தேவையா?
ஒரு நபர் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கிறார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக பாலில் இருக்கும் லாக்டோஸ் என்ற ஒரு சத்து ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று கூறப்படும். லாக்டோஸ் என்ற புரதத்தை உடலால் செரிமானம் செய்ய முடியவில்லை என்றால் அது அலர்ஜியாக வெளிப்படும். எனவே லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் மற்றும் அனைத்து பால் பொருட்களையும் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி வேறு சில உடல் நலக் கோளாறுகள் அல்லது உணவுக் கட்டுப்பாடு காரணங்களுக்காக சிலர் பால் பொருட்களை தவிர்க்கலாம்.
பசும்பால் / மாட்டுப்பால் எவ்வளவு ஆரோக்கியமானது:
நீங்கள் முழுவதுமாக பால் பொருட்களை தவிர்த்து பால் அல்லாத, நான்-டைரி மில்க் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் முன்பு பசும்பால் எவ்வாறு எவ்வளவு ஆரோக்கியமானது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..? இதுவரை யாருக்கும் தெரியாத ஆபத்து..!
பல ஆண்டுகளாக பசும் பால் அனைவரும் பயன்படுத்தக்கூடிய மிகவும் எளிமையான ஆரோக்கிய பானமாக இருந்து வருகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு பசும்பால் மிகவும் முக்கியமான அடிப்படை மற்றும் ஊட்டச்சத்து பானம் ஆகும். இதில் இயற்கையாகவே உடலுக்கு தேவைப்படும் சத்து மற்றும் கொழுப்பு, புரதம், மிக முக்கியமான கால்சியம் சத்து ஆகிய அனைத்து முக்கிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் கொழுப்பு சத்தும் உடல் வளர்ச்சிக்கு தேவையானதாகவும் உள்ளது.
நீங்கள் எப்போதெல்லாம் பாலுக்கு மாற்றாக வேறு பொருளை பயன்படுத்தலாம்?
நீங்கள் பாலுக்கு மாற்றாக வேறு பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் பின்வரும் காரணங்களுக்காக மட்டும் அவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
எப்போதெல்லாம் பால் பொருட்களுக்கு மாற்றாக வேறு பொருளை தேர்வு செய்யக்கூடாது?
பாலுக்கு மாற்றாக நீங்கள் வேறு உணவைத் தேடும்போது பால் போலவே இருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்வு செய்யும் பொழுது சுவையூட்டப்படாத, இனிப்பு சேர்க்கப்படாத பானங்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரு சிலர் பாலுக்கு மாற்றாக பாதாம், முந்திரி, வேர்க்கடலை என்று கொட்டைகளில், விதை வகைகளிலிருந்து எடுக்கப்படும் பாலை குடிக்கிறார்கள். ஆனால் உங்களுக்கு நட்ஸ் அல்லது சீட்ஸ் அலர்ஜி இருந்தால் அதையும் பயன்படுத்த முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cow Milk