Home /News /lifestyle /

கொழுப்புச் சத்து உடலுக்கு அவசியமானதா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!

கொழுப்புச் சத்து உடலுக்கு அவசியமானதா..? கட்டுக்கதைகளும்... உண்மைகளும்..!

கொழுப்புச்சத்து

கொழுப்புச்சத்து

உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என கண்டறியப்பட்டாலும் கூட, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலமாக அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

கொழுப்பு சத்து என்பதை நாம் ஒருபோதும் நல்ல கண்ணோட்டத்தில் அணுகுவது கிடையாது. ஆரோக்கியமற்றது, நோய் வரும், இதய பாதிப்பு வரும் என்றெல்லாம் கொழுப்புச் சத்தை நோக்கிய அச்சம் பின்னப்பட்டிருக்கிறது. உடலில் கொழுப்புச் சத்து எந்த அளவுக்கு குறைவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு உடல்நலம் நன்றாக இருக்கிறது என மருத்துவர் கூறுவதால் தான் நாம் மிகுந்த அச்சம் அடைகிறோம். கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால், நமது வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

உண்மை என்னவென்றால் கொழுப்புச் சத்து என்பது கெடுதலான விஷயம் கிடையாது. கொழுப்புச் சத்து குறித்த பல கட்டுக்கதைகள் காரணமாகவே நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆகவே, அதுகுறித்த சில தகவல்களை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

அனைத்து கொழுப்புமே கெட்டதல்ல

இது உண்மையில்லை. கொழுப்புச் சத்து குறித்து பரவலாக பரவியுள்ள கட்டுக்கதை இதுதான். ஹார்மோன்களை உருவாக்கவும், செல்களை கட்டமைக்கவும் நமது உடலுக்கு கொழுப்புச்சத்து தேவை என்பது உண்மை தான். ஆனால், லோ டென்சிட்டி கொலஸ்டிரால் என்னும் எல்டிஎல் கொழுப்பு மட்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதே சமயம், ஹை டென்சிட்டி கொலஸ்ட்ரால் என்னும் ஹெச்டிஎல் கொழுப்பு உடலுக்கு நன்மை தரும். இந்தக் கொழுப்புச் சத்து அதிகமாக இருந்தால் இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.



அதிக கொழுப்புச் சத்து இருந்தால் அறிகுறி தென்படும்

அப்படியொன்றும் தென்படாது. உடலில் அதிக கொழுப்புச் சத்து இருந்தால், எந்த அறிகுறியும் காட்டாது. ஆகவே தான் துரித உணவுகள் மற்றும் வாழ்வியல் சார்ந்த தவறான பழக்கங்களால் உடலில் கொழுப்பு சேரக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கொழுப்புச் சத்து உடல் உறுப்புகளில் நீண்ட நாட்களாக படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் அது அறிகுறிகளை காட்டத் தொடங்கும்.

ஆர்டிஃபிஷியல் ஸ்வீட்னர்களால் உங்கள் கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.!

குறைவாக சாப்பிட்டால் கொழுப்பு குறையும்

நிச்சயமாக கிடையாது. எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைக் காட்டிலும், எதை சாப்பிடுகிறீர்கள் என்பதே முக்கியமானது. இறைச்சி, பட்டர் மற்றும் சீஸ் போன்ற சேச்சுரேடட் கொழுப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. உடலில் கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், நார்ச்சத்து மற்றும் அன்சேச்சுரேடட் கொழுப்பு வகை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.



கொழுப்பை குறைப்பது கடினம்

நீங்கள் முயற்சி செய்யாத வரையில் எதுவுமே முடியாத ஒன்று தான். உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது என கண்டறியப்பட்டாலும் கூட, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலமாக அதை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

டயட் கட்டுப்பாடு மட்டுமே பலன் தரும்

இது ஓரளவுக்கு உண்மை என்றாலும் கூட, மிகுதியான கொழுப்பு இருக்கும் சமயங்களில் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் போன்றவற்றை புறக்கணிக்கக் கூடாது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cholesterol

அடுத்த செய்தி