Home /News /lifestyle /

கொண்டைக்கடலை அல்லது ராஜ்மா... உடல் எடையை குறைக்க இரண்டில் எது சிறந்தது..?

கொண்டைக்கடலை அல்லது ராஜ்மா... உடல் எடையை குறைக்க இரண்டில் எது சிறந்தது..?

கொண்டைக்கடலை , ராஜ்மா

கொண்டைக்கடலை , ராஜ்மா

சோலே எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸ் (சிவப்பு காராமணி) இரண்டுமே புரதச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகள் ஆகும்.

வட இந்தியர்களிடையே சோலே, அதாவது நம்ம ஊற கொண்டைக்கடலை மற்றும் ராஜ்மா மசாலா மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. சப்பாத்திக்கு ஏற்ற சரியான சைட்-டிஷ் மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளதால் இந்தியா முழுவதும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோரின் விரும்ப உணவாக இவை இரண்டும் மாறியுள்ளன.

சோலே எனப்படும் கொண்டைக்கடலை, ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸ் (சிவப்பு காராமணி) இரண்டுமே புரதச்சத்து நிறைந்துள்ள பருப்பு வகைகள் ஆகும். சப்பாத்தியோடு மட்டுமின்றி, சாதத்துடனும் சாப்பிடலாம் அல்லது வேகவைத்த சோலே அல்லது ராஜ்மாவுடன் காய்கறிகளைக் கலந்து ஆரோக்கியமான சாலட்டாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த இரண்டும் உங்களுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும். அவற்றை உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், சருமத்தின் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. அனைத்து விஷயங்களிலும் இரண்டும் சரி சமமாக இருந்தாலும், உடல் எடையைக் குறைப்பதில் இரண்டில் எது சிறந்தது என்ற குழப்பம் தோன்றலாம். இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொண்டைக்கடலையில் உள்ள சத்துக்கள் (சோலே):

மக்ரோ நியூட்ரியண்ட்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், என நமது உடலுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கொண்டைக்கடலையில் நிறைந்துள்ளன.

1 கப் அல்லது 164 கிராம் கொண்டைக்கடலையில் 597 கலோரிகள் உள்ளன. அத்துடன், 19 கிராம் புரதம், 4 கிராம் கொழுப்பு, 60 கிராம் கார்போஹைட்ரேட், 172 மில்லி கிராம் கால்சியம், 10 மில்லி கிராம் இரும்புச்சத்து, 188 மில்லி கிராம் மக்னீசியம், 2.5 மில்லி கிராம் துத்தநாகம் உள்ளது.



கிட்னி பீன்ஸில் உள்ள சத்துக்கள் (ராஜ்மா):

கொண்டைக்கடலையில் உள்ளது போலவே கிட்னி பீன்ஸ் எனப்படும் ராஜ்மாவிலும் அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் மூன்று மக்ரோ நியூட்ரியண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக விளங்குகிறது. 164 கிராம் கிட்னி பீன்ஸை எடுத்துக்கொண்டால், உடலுக்கு 564 கலோரிகள் கிடைக்கின்றன.

அத்துடன் 24 கிராம் புரதம், 1.3 கிராம் கொழுப்பு, 90 கிராம் கார்போஹைட்ரேட், 234 மில்லி கிராம் கால்சியம், 13 மில்லி கிராம் இரும்புச்சத்து, 229 மில்லி கிராம் மக்னீசியம், 4 மில்லி கிராம் துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் இலவங்கப் பட்டை... இன்னும் பல நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

கொண்டைக்கடலை vs கிட்னி பீன்ஸ்:

கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் இரண்டிலும் கலோரிகள் அதிகம். மக்ரோநியூட்ரியண்ட் விகிதங்களை ஆராய்ந்தால், கொண்டைக்கடலையை கிட்னி பீன்ஸ் உடன் ஒப்பிடும்போது குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கொழுப்பு உள்ளது. இருப்பினும் கொண்டைக்கடலையை விட கிட்னி பீன்ஸில் அதிக புரதச்சத்து உள்ளது. தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் அடிப்படையில் பார்த்தால், இரண்டு பருப்பு வகைகளிலும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் அதிகம் உள்ளது. ஆனால் பீன்ஸ் கொண்டைக்கடலையை விட சற்றே அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.



உடல் எடையை குறைக்க சிறந்தது எது?

கிட்னி பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை இரண்டும் சத்தானவையாகவும், வெவ்வேறு அளவு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளவையும் உள்ளன. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை வைத்து பார்க்கும் போது, கிட்னி பீன்ஸ், கொண்டைக்கடலையை விட ஆரோக்கியமானதாக உள்ளது. ஏனெனில் அது சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரிகளில் குறைவாகவும் உள்ளது. அதிக ஊட்டச்சத்துடன் கூடிய ஆரோக்கியமான உணவை சேர்க்க விரும்பினால், நீங்கள் கிட்னி பீன்ஸை தேர்வு செய்யலாம்.

உடல் எடை குறைப்பில் பங்களிப்பு என்ன?

கிட்னி பீன்ஸ் மற்றும் கொண்டைக்கடலை இரண்டையும் அரிசியுடன் சேர்த்து சாப்பிடும் போது, அதில் உள்ள ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் முழுமையான புரதத்தை உருவாக்குகின்றன. உடல் எடையை குறைக்க போதுமான அளவு புரதச்சத்து அவசியம். ஏனென்றால் புரோட்டீன் சாப்பிடதற்கான மனநிறைவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமற்ற சாப்பிடுவதைத் தடுக்கிறது. இரண்டிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அவை நீண்ட நேரம் உங்களை பசியை உணராமல் தடுக்கிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Rajma Recipes

அடுத்த செய்தி