சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது அவசியமான ஒன்று. பெரும்பாலும் வீடுகளில் சின்ன வெங்காயத்தை சாம்பாரில் சேர்பார்கள், கார குழம்பில் போடுவார்கள். அப்படி குழம்பில் சேர்த்து செய்தால் கூட வீட்டில் இருக்கும் குழந்தைகள் அந்த வெங்காயத்தை எடுத்து விட்டு தான் சாதத்துடன் குழம்பை சாப்பிடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களுக்கு சின்ன வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் கிடைக்காமல் போய் விடுகிறது. இதை தவிர்க்க, குழந்தைகளை சின்ன வெங்காயம் சாப்பிட வைக்க அருமையான ஐடியா சட்னி செய்வது.
மொத்தமாக வதக்கி சட்னியாக அரைத்து விட்டால் போதும், குழந்தைகள் பக்குவமாய் சாப்பிடுவார்கள். இந்த சின்ன வெங்காய சட்னி கார சட்னி போல் புளிப்பு பிளஸ் காரத்துடன் ருசியாக இருக்கும். தோசை மற்றும் சுட சுட இட்லிக்கு இந்த சின்ன வெங்காய சட்னி காம்போ அது தூளாக இருக்கும். சின்ன வெங்காய சட்னி ரெசிபி வீடியோ பிரபல யூடியூப் சேனலான ’கோமதி கிச்சனஸ்’ என்ற சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. ஆந்திரா ஸ்டைல் பருப்பு குழம்பு.. ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்வீங்க!
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு, கடுகு, பெருங்காயம்.
செய்முறை
1. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
2. பின்பு அதனுடன் காய்ந்த மிளாக்ய், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
3. நன்கு வதக்கிய பின்பு அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
4. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதையும் படிங்க.. தக்காளியுடன் கொத்தமல்லி சேர்த்து சட்னி செய்து இருக்கீங்களா? அடுத்தமுறை ட்ரை பண்ணுங்க!
5. இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் சுவையான சின்ன வெங்காய சட்னி தயார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.