• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • கோகோ-கோலா குடித்த நபர் திடீரென உயிரிழப்பு - சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

கோகோ-கோலா குடித்த நபர் திடீரென உயிரிழப்பு - சீனாவில் அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் சாவோயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது குடலின் சுவர் மற்றும் போர்டல் நரம்பில் நியூமேடோசிஸ் என்ற அசாதாரண வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

 • Share this:
  சீனாவின் பெய்ஜிங்கில் 1.5 லிட்டர் கோகோ கோலா குளிர்பானத்தை குடித்தவர் திடீரென உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நண்பர்கள் பார்ட்டியில் கலந்து கொள்ளும்போது பீர் அல்லது பெப்சி, கோகோ கோலா, செவன் அப் உள்ளிட்ட குளிர்பானங்களை ஒரே நேரத்தில் அதிகம் குடிப்பவர்கள் யார்? அல்லது விரைவாக குடிப்பவர்கள் யார்? என்ற போட்டியை நடத்துவார்கள். கல்லூரி நண்பர்கள் அல்லது வேலை செய்யும் இடத்தில் உள்ள நண்பர்கள் இந்தமாதிரியான போட்டிகளில் அடிக்கடி ஈடுபடுவதை பார்க்க முடியும். அப்படியான போட்டிகளில் நீங்கள் ஏற்கனவே ஈடுப்பட்டிருந்தாலோ? அல்லது இனிமேல் டூர் போகும்போது அந்த போட்டியை வைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தாலோ? நிச்சயமாக, அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள்.

  ஏனென்றால், கோகோ கோலா குளிர்பானத்தை அதிகமாக குடித்து ஒருவர் உயிரை இழந்துள்ளார். மதுபானத்தை ராவாக குடித்துவிட்டு, போதை தலைக்கேறி உயிரிழந்தவர்களை கேள்விபட்டிருப்போம். ஆனால், குளிர்பானத்தை குடித்து உயிரிழப்பது என்பது எப்போதுதாவது, அரிதாக நடைபெறும். சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தில் நபர் ஒருவர் அண்மையில் 1.5 லிட்டர் கோகோ கோலா பானத்தை வாங்கி, 10 நிமிடத்தில் குடித்துள்ளார். அடுத்த 6 மணி நேரம் கழித்து அவருடைய வயிறு உப்புசமாகி, வீங்கியுள்ளது. நேரம் செல்ல செல்ல, அவருக்கு வயிற்று வலியும் அதிகரித்துள்ளது.

  கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் குடும்ப உறுப்பினர்கள் அவரை சாவோயாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு உடல் நலப்பிரச்சனைகள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. பின்னர், சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கும்போது குடலின் சுவர் மற்றும் போர்டல் நரம்பில் நியூமேடோசிஸ் என்ற அசாதாரண வாயு இருப்பது கண்டறியப்பட்டது.

  இதையும் படிக்க: மிக்ஸியில் அரைக்காமல் கிரேப் ஜூஸ் எப்படி போடனும் தெரியுமா..? மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லி தரும் டிப்ஸ்...


  அதிகப்படியான குளிர்பானத்தை பருகியவுடன், கல்லீரலில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உருவாகி, இஸ்கெமியா உருவாகியுள்ளது. இதனால், நரம்பு பாதிப்புகள் உருவாகி அவர் உயிரிழப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சிகிச்சையில் இருக்கும்போதே அந்த நபர் உயிரிழந்தது மருத்துவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதிகப்படியான குளிர்பானத்தை பருகி, அசாதாரண வாயு அடைப்பால் அந்த நபர், தன் வாழ்க்கையை பறிகொடுக்க நேரிட்டுள்ளதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: இதய நோய் பற்றிய பயம் இருக்கா ? கவலைய விடுங்க.. இனி கடுகு எண்ணெய் பயன்படுத்துங்க..


  அந்த நபர் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவர் கோகோ கோலாவை அதிகம் பருகிய காரணத்தினால், உடலில் உருவாகிய வாயுப் பிரச்சனையால் உயிரிழப்பை எதிர்கொண்டுள்ளார் என்ற தகவலை மட்டும் டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை படிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையில் அவர் எந்த உடல் நலக்கோளாறும் இல்லாமல் இருந்த ஒரு நபர், தவறான முறையில் குளிர்பானத்தை அருந்தியதால் உயிரிழந்தது என்பது, உணவு மற்றும் குளிர்பானங்களை விளையாட்டாக எடுத்துக் கொண்டு போட்டிபோடுபவர்களுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: