Home /News /lifestyle /

சில்லி சிக்கன் தெரியும்... சில்லி மட்டன் தெரியுமா? ட்ரை பண்ணி பாருங்க...

சில்லி சிக்கன் தெரியும்... சில்லி மட்டன் தெரியுமா? ட்ரை பண்ணி பாருங்க...

சில்லி மட்டன்

சில்லி மட்டன்

Chilly Mutton | சில்லி சிக்கன் சாப்பிட்டுருப்பீங்கள்... ஆனால் சில்லி மட்டன் சாப்பிட்டுரூக்கீங்களா? இதோ ரெசிபி...

சில்லி வகை என்றாலே சிக்கனில் சமைத்தால்தான் ருசியாக இருக்கும் என்கிற கருத்து உண்டு. ஆனால் இப்படி மட்டனிலும் சமைத்தால் ருசியாக இருக்கும். இதுவரை சுவைத்ததில்லை எனில் செய்து பாருங்கள் சில்லி மட்டன். 

தேவையான பொருட்கள்

மட்டன் - ஒரு கப் (சிறு துண்டுகளாக நறுக்கவும்)

வெங்காயம் - 4

தக்காளி - 1

ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிது

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்

சோள மாவு - 1 கப்

கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

கறி மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்

கேசரி பொடி - ஒரு சிட்டிகை

உப்பு - தே. அ

குடை மிளகாய் - 1 கப்

மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

சில்லி மட்டன்


செய்முறை :

குக்கரில் நறுக்கிய மட்டன், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் மட்டன் நீரை வெளியே ஊற்றாமல் தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் தக்காளி சேர்க்கவும். அடுத்ததாக மிளகாய் சாஸ், கறி மசாலா பொடி, பச்சை மிளகாய் சாஸ், மஞ்சள் என எல்லா பொடிகளையும் சேர்க்கவும். பின் குடை மிளகாயையும் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அதோடு மட்டன் எலும்புத் துண்டுகளை சேர்க்கவும்.

மேலும் படிக்க... டேஸ்டியான ஆப்பிள் மில்க்‌ஷேக் செய்ய ரெசிபி...

அடுத்ததாக வேகவைத்த மட்டன் நீரை சேர்க்கவும். சோள மாவு மற்றும் கேசரி பொடி சேர்க்கவும். கலவையை நன்றாக கிளறவும். இறுதியாக ஸ்ப்ரிங் ஆனியனைத் தூவி இறக்கிவிடவும். சுவையான சில்லி மட்டன் தயார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Mutton, Mutton recipes

அடுத்த செய்தி