Home /News /lifestyle /

சாப்பிடும் உணவு செரிமானிப்பதில்லையா..? தினசரி உணவில் இந்த காய்கறிகளை சேத்துக்கோங்க...

சாப்பிடும் உணவு செரிமானிப்பதில்லையா..? தினசரி உணவில் இந்த காய்கறிகளை சேத்துக்கோங்க...

வயிறு உப்பசம்

வயிறு உப்பசம்

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு குடல் ஆரோக்கியமும் முக்கியத்தும் வாய்ந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  நாம் சமைக்கும் உணவுப்பொருள்களோடு சிறிதளவு இஞ்சி, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, நெய் போன்றவற்றைச் சேர்க்கும் போது எவ்வித செரிமானப் பிரச்சனையும் நமக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

  நாவிற்கு ருசியாக விதவிதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் பழக்கம் அனைவரிடம் உள்ளது. ஆனால் சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு செரிமானக் கோளாறை ஏற்படுத்தி வயிறு எரிச்சல், உமட்டல், வயிறு உப்பம், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக நம்முடைய உடலில் செரிமானம் முறையாக நடைபெறாவிடில் உடல் சோர்வடைவதோடு தேவையில்லாமல் பல உடல் உபாதைகளையும் நாம் சந்திக்க நேரிடும்.

  குறிப்பாக ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு குடல் ஆரோக்கியமும் முக்கியத்தும் வாய்ந்தது. எனவே இதனை நினைவில் வைத்து நீங்கள் சமைக்கும் முறையில் எளிய மாற்றங்களைச் செய்து உங்களது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயலுங்கள் என்கின்றனர் மருந்துவர்கள். இதுகுறித்து டாக்டர் நிதி பாண்டியா பன்ஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சில டிப்ஸ்களை நமக்காகப் பகிர்ந்துள்ளார். அவை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.  செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவும் சமையல் டிப்ஸ்கள்….

  நாம் சாப்பிடும் உணவு செரிமானம் அடையவில்லை என்றால் சீரகம், வாழைப்பழம், அதிகளவு தண்ணீர் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள பரிந்துரைப்பார்கள். ஆனால் நாம் சமைக்கும் போது செரிமானத்திற்கு உகந்த வகையில் சமைந்தால் நிச்சயம் எவ்வித பாதிப்பும் நமக்கு ஏற்படாது.

  மதியம் சாப்பிட்ட உடனே உங்களை மீறி தூக்கம் வருதா..? உடலில் நடக்கும் இந்த மாற்றம்தான் காரணம்...

  காலிபிளவர் :

  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. சமைக்கும் போது காலிப்பிளவருடன் சிறிதளவு பெருங்சீரகம் சேர்த்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது.

  பருப்பு :

  புரோட்டீன் அதிகம் நிறைந்த பருப்புகளை வாரத்தில் இருமுறையாவது குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம். சில நேரங்களில் செரிமான பிரச்சனை ஏற்படுவதோடு வயிற்று வலியையும் அனுபவிக்ககூடும். எனவே பருப்பில் குழம்பு, சாம்பார், உருண்டை குழம்பு போன்றவை வைக்கும் போது அதனுடன் சிறிதளவு சீரகம் சேர்ப்பது நல்லது. சீரகத்தில் உள்ள சத்துக்கள் உங்களது குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து செரிமானப் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.  பச்சைக் காய்கறிகள் :

  ப்ரோக்கோலி, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும் போது மிளகு சேர்த்து சமைக்க வேண்டும். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

  உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்... ஏன் தெரியுமா..?

  இஞ்சி :

  செரிமானப் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும் உணவுப்பொருள்களில் முக்கியமானது என்று கூறலாம். இஞ்சியில் ஜிஞ்சரால் எனும் எண்ணெய் இருப்பதால் நம்முடைய வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும் போது வெளிப்படும் வாயுவை வயிறு மற்றும் குடல் போன்ற உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலம் வெளியேற்றுகிறது.

  எனவே நீங்கள் சட்னி உள்பட அனைத்துக் குழம்பு வகைகளிலும், கலவை சாதங்களிலும் இஞ்சியை மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள். காலை அல்லது மாலையில் இஞ்சி டீயும் நீங்கள் குடிக்கலாம்.  இதே போன்று நீங்கள் சமைக்கும் போது உங்களது ரெசிபிகளின் சுவைக்கு ஏற்ப கொஞ்சம் புதினா, லங்கம், வெந்தயம், பெருங்காயம், சீரகம், ஓமம் போன்றவற்றை மறக்காமல் சேர்த்து விடுங்கள். இது உங்களது உடலில் மிக முக்கியமான செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு பேருதவியாக உள்ளது. இதோடு ஆரோக்கியமான உணவுமுறைகளோடு முறையாக உடற்பயிற்சி செய்வது, உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துவது போன்றவை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால் போதும் எவ்வித உடல் உபாதைகளும் நிச்சயம் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.

   
  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Digestion Problem, Vegetables

  அடுத்த செய்தி