புத்துணர்ச்சி அளிக்கும் சிக்கன் சூப்!

உங்களுக்குப் பிடித்த சிக்கன் சூப்பை தைரியமாக ஆர்டர் செய்து அருந்துங்கள்..

Sivaranjani E | news18
Updated: January 3, 2019, 10:57 PM IST
புத்துணர்ச்சி அளிக்கும் சிக்கன் சூப்!
சிக்கன் சூப்
Sivaranjani E | news18
Updated: January 3, 2019, 10:57 PM IST
பலரும் சிக்கன் சூப்பை அதன் சுவைக்காக மட்டுமே அருந்தியிருப்பீர்கள். ஆனால் அதில் பல நன்மைகளும் இருக்கின்றன என்பது தெரியுமா? குறிப்பாக இருமல், மூக்கடைப்பு என சளி தொடர்பான நோய்களுக்கு நிவாரணியாக இருக்கிறது.

”சளி ஏற்படும்போது நம் உடலில் நீரேற்றம் அதிகமாக இருக்க வேண்டும்” என்கிறார் பெத் இஸ்ரேல் டெக்கான்ஸ் மருத்துவ மையத்தின் (Beth Israel deaconess medical center) உணவுமுறை வல்லுநரான சாண்டி ஆலோனென்.

மேலும் இது தொண்டை தொற்று நோய்களுக்குத் தீர்வாகவும் இருப்பதாகக் கூறுகிறார். சிக்கனில் ’டிரிப்தோபன்’ எனப்படும் அமினோ அமிலம் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த அமிலமானது மகிழ்சியை ஊக்குவிக்கும் செரோடோனின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. இதனால் உங்கள் உடல் மற்றும் மனதிற்கு உற்சாகத்தை அளித்து புத்துணர்வை அளிக்கிறது.

அதுமட்டுமன்றி புரதச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சுவாசக் கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இது உணவு அஜீரணத்திற்கு உதவுவதோடு பல விட்டமின்களை கொண்டுள்ளது. உடல் சோர்வு, உடல் சரியின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு சிக்கன் சூப் குடித்தால் போதும் எல்லாம் பறந்து ஓடும்.

இனி ரெஸ்டாரண்டுகளில் உங்களுக்குப் பிடித்த சிக்கன்  சூப்பை தைரியமாக ஆர்டர் செய்து அருந்துங்கள்.
First published: January 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...