முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புரூட் சாலட் தெரியும்.. அதென்னை சிக்கன் சாலட்..? இதோ ரெசிபி..!

புரூட் சாலட் தெரியும்.. அதென்னை சிக்கன் சாலட்..? இதோ ரெசிபி..!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ‘சிக்கன் சாலட்’ செய்முறை!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ‘சிக்கன் சாலட்’ செய்முறை!

சிக்கனில் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதற்கான பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளது. எனவே, சிக்கன் சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்த ஓட்டம் கிடைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் அனைவருக்கும் புரூட் சாலட் தெரியும். ஆனால், எப்போதாவது சிக்கன் சாலட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புரதம், கொழுப்பு சத்து நிறைந்த கோழிக்கறி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது அல்ல என பலர் கூறுவதுண்டு. இந்நிலையில், சிக்கன் கொண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற சாலட் ஒன்றை செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 200 கிராம்.

ஆலிவ் எண்ணெய் - 3 ஸ்பூன்.

முட்டைக்கோஸ் - 100 கிராம்.

செலரி இலை - 2.

வெள்ளரிக்காய் - 1.

கேரட் - 1.

வெங்காயம் - 1.

தக்காளி - 1.

பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்.

முளைகட்டிய பயறு - 1/2 கப்.

வினிகர் - தேவையான அளவு.

செய்முறை :

சாலட் செய்வதற்கு முன்னதாக, சாலட் செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூய் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துவைத்துள்ள சிக்கன் கோழியின் கால் பகுதியாக இருந்தால் இன்னும் சிறப்பு. இப்போது, சுத்தம் செய்த சிக்கனை தோல் நீக்கி வைக்கவும்.

தற்போது சிக்கனின் இரு புறத்திலும் ஆலிவ் ஆயிலை நன்கு பரவலாக தடவி, ஒரு மைக்ரோ ஓவனில் வைத்து பேக் செய்யவும். சுமார், 165 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இதனிடையே, சாலட் செய்ய எடுத்துக்கொண்ட முட்டைக்கோஸ், செலரி இலைகள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெலிந்த துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

Also Read | இட்லி தோசைக்கு இனி இந்த சட்னியை செஞ்சு கொடுங்க..!

பின்னர் இதனை தனியாக இரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளவும். இதை தொடர்ந்து கேரட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி இந்த கோப்பையில் சேர்த்துக்கொள்ளவும்.

மேலும், முளைக்கட்டிய பயறு மற்றும் பெரும்சீரகத்தையும் இதனோடு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

தற்போது மைக்ரோ ஓவனில் இருக்கும் சிக்கன் துண்டினை வெளியே எடுத்து நன்கு ஆற விடவும். சிக்கன் துண்டு ஆறியதும் இதனை முடிந்த அளவுக்கு சிறிய துண்டாக நறுக்கி காய்கறிகள் உள்ள கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும்.

தற்போது இந்த கோப்பையில் தேவையான அளவு வினிகர் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள, சுவையான சிக்கன் சாலட் தயார். இந்த சாலட்டினை ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, போதிய அளவு குளிரூட்டம் செய்து பின்னர் சாப்பிடலாம்.

குறைந்த கலோரிகள், புரதம் கொண்ட இந்த சாலட் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிப்பதோடு, இரத்த குளுக்கோஸ் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அந்த வகையில் இந்த சாலட், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.

First published:

Tags: Chicken recipe, Chicken Soup, Food, Food recipes