HOME»NEWS»LIFESTYLE»food chicken popcorn recipes like kfc esr ghta

KFC சிக்கனை போல் சுவையான சிக்கன் பாப்கார்ன் ரெசிபிகளை வீட்டிலேயே செய்யலாம்!

பலவித மசாலா கலவை மற்றும் மிளகாய் சேர்த்து செய்யப்படும் சிக்கன் பாப்கார்ன் (Chicken Popcorn) மிகவும் ருசியாக இருக்கும்.

KFC சிக்கனை போல் சுவையான சிக்கன் பாப்கார்ன் ரெசிபிகளை வீட்டிலேயே செய்யலாம்!
சிக்கன் பாப்கார்ன்
  • Share this:

KFC சிக்கனை இந்த ஊரடங்கில் சாப்பிட முடியாமல் தவிக்கிறீர்கள் எனில் கவலை வேண்டாம் வீட்டிலேயே நீங்கள் செய்து சாப்பிடலாம். பலவித மசாலா கலவை மற்றும் மிளகாய் சேர்த்து செய்யப்படும் சிக்கன் பாப்கார்ன் (Chicken Popcorn) மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். சைவ உணவைக்கூட பிடிக்காதவர்கள் நம்மிடத்தில் உண்டு ஆனால் அசைவத்தை பிடிக்காமல் இருப்பவர்கள் வெகு சிலரே.

அந்த அளவிற்கு அசைவத்தில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள் அவற்றின் வாசம் எப்பொழுதும் நம் அடி நாவில் மறைந்திருக்கும். இந்த அசைவத்தில் ஒன்றோ அல்லது இரண்டு வகைகளோ கிடையாது. குறிப்பாக சிக்கன் பாப்கார்னை பற்றி நினைத்தாலே போதும் பலருக்கு நாவில் எச்சில் ஊறும். அந்தவகையில் இந்த சுவையான மற்றும் மொறுமொறு சிக்கன் பாப்கார்னை வீட்டிலே எப்படி தயாரிப்பது என்பது பற்றி இங்கு காண்போம்.,





ரெசிபி 1: Chicken Popcorn Recipe 1

தேவையான பொருட்கள்  :

சிக்கன் - 1/4 கிலோ,
மிளகுப் பொடி - அரை தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கு,
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மிளகாய் பொடி – தேவையான அளவு,
சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் கறிவேப்பிலை - தேவையான அளவு,
ஃப்ளேக்ஸ் – தேவையான அளவு,
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி,
முட்டை - 1,
மைதா மாவு – கைப்பிடியளவு,
சோள மாவு - கைப்பிடியளவு

செய்முறை :

1: எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மைதாவுடன் சோளமாவைக் கலந்து 2 பாகமாக பிரித்து அதில் ஒரு பாக மாவில் சிறிது உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.

2: முட்டையை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி அடித்து வைக்கவும்.

3: பொடி வகைகளை சிக்கனில் சேர்த்து, இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பின்னர் நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.

4: பின் ஊற வைத்த சிக்கனை உப்பு சேர்க்காமல் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எடுக்கவும். பிறகு அதனை முட்டையில் முக்கி எடுக்கவும். பின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து, அதிகமாக இருக்கும் மாவை சலித்து வெளியேற்றவும்.

5: பின் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி.

காலிஃப்ளவர் 65....பேக்கரி, ரெஸ்டாரண்ட் சுவையைப் போல அப்படியே செய்ய தெரியுமா..? இந்த ரெசிபி டிரை பண்ணி பாருங்க..!



ரெசிபி 2:  Chicken Popcorn Recipe 2

தேவையான பொருட்கள்  : 

சிக்கன் - 250 கி
கார்ன் ஃப்ளார் மாவு - 3 மேஜைக்கரண்டி,
முட்டை - 1,
ப்ரட் க்ரம்ப்ஸ் - 2 கப்,
உப்பு - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
வெங்காய பொடி - 3 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : 

1: ஒரு பௌலில் மிளகாய் தூள், மிளகு, இஞ்சு பூண்டு விழுது, மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

2: நன்கு கலந்து உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொள்ளவும். சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

3: வெட்டி வைத்த சிக்கனை கலந்து வைத்த மசாலா பொருட்களுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். அத்துடன் கார்ன் மாவு சேர்த்து சிக்கன் மேல் தடவி கொள்ளவும்.

4: மேலும் அதில் முட்டை அல்லது மோர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒவ்வொரு சிக்கன் துண்டையும் இந்த ப்ரட் க்ரம்பில் தொட்டு எடுக்கவும்.

5: பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்.

6: மொத்தமாக போடாமல் ஒவ்வொரு துண்டாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும். பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து எடுக்கவும். பின் கெட்சப்புடன் சேர்த்து பரிமாறவும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை என்ற வீதத்தில் இந்த சிக்கன் பாப்கார்னை (Chicken Popcorn) வீட்டிலேயே சமைத்து பரிமாறுங்கள். இந்த சிக்கன் பாப்கார்னை அடிக்கடி சாப்பிடுவதை தவிருங்கள், மேலும் இதை வீட்டிலேயே செய்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை ஓரளவிற்கு பாதுகாக்கும்.

 

 

 

 
Published by:Sivaranjani E
First published: