Home /News /lifestyle /

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் மசாலா ஃபிரை செய்வது எப்படி?

உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் மசாலா ஃபிரை செய்வது எப்படி?

சிக்கன் ஃபிரை

சிக்கன் ஃபிரை

Chicken Recipes : சுவையான சிக்கன் மசாலா ஃபிரையை இப்படி செய்து சாப்பிடுங்கள்.

மே மாதத்தில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாக இருக்கும். இந்த சமயத்தில் சூடான, சுவையான பல சமையல் ரெசிஃபிக்களை சமைத்து கொடுத்து நம் குழந்தைகளை சந்தோஷப்படுத்தலாம். உணவுக்கு சைட் டிஷ்ஷாக அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாக பல ரெசிஃபிக்களை முயற்சி செய்யலாம்.

அந்த வகையில் சிக்கன் மசாலா ஃபிரை என்பது நல்ல தேர்வாக அமையும். மிளகாய் தூள், மல்லித் தூள் (தனியா தூள்), கரம் மசாலா போன்ற வீட்டில் உள்ள மசாலா பொருட்களை கொண்டே இதை செய்து விடலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு சிக்கன் மிகவும் பிடித்தமான ஒன்று. சிக்கனில் நிறைய புரதச்சத்து இருக்கிறது. ஆகவே, இது ஒரு சத்தான டிஷ்ஷாகவும் இருக்கும். இதில், வரமிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை சேர்ப்பதால் அதன் வாசம் அருகில் இருப்பவர்களின் மூக்கை துளைக்கும்.

தேவையான பொருட்கள்:

நறுக்கி வைக்கப்பட்ட சிக்கன் - 500 கிராம்
பூண்டு பேஸ்ட் - ½ டேபிள் ஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - ½ டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - ½ டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது - ஒரு கப்
பச்சை மிளகாய் நறுக்கியது - 4
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வர மிளகாய் - 2

also read : இந்த ரம்ஜானில் மிஸ் பண்ணவே கூடாத 5 மட்டன் பிரியாணி வகைகள்..!



செய்முறை

* கடாயை சூடேற்றி அதில் எண்ணெய் ஊற்றவும். சூடான எண்ணெயில் வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* இஞ்சி பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். நல்ல செந்நிறமாக வரும் வரை வதக்கவும்.
* நறுக்கி வைத்த சிக்கன் கறியை சேர்த்து வதக்கவும். அதில் உள்ள தண்ணீர் முழுவதும் கீழே இறங்க வேண்டும்.
*இப்போது மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் தெளித்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
* உங்கள் சிக்கன் மசாலா ஃபிரை இப்போது தயார் ஆகிவிட்டது. இதை மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது சப்பாத்தி சாப்பிடும்போது சைட் டிஷ்ஷாக எடுத்து கொள்ளலாம்.

also read : சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?



எந்த வித கலர் பவுடர் மற்றும் இதர ஆடட் பிளேவர்ஸ் சேர்க்காமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுவதால் சுத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். வீட்டிலேயே புதினா சட்னி அல்லது மயோனைஸ் என ஏதேனும் ஒன்றை தயார் செய்து, அதில் இந்த மசாலா சிக்கனை டிப் செய்து சாப்பிடலாம்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Chicken Recipes

அடுத்த செய்தி