ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ருசியும் வாசனையும் பட்டையைக் கிளப்பும்.. சிக்கன் குழம்ப இப்படி செய்யுங்க!

ருசியும் வாசனையும் பட்டையைக் கிளப்பும்.. சிக்கன் குழம்ப இப்படி செய்யுங்க!

சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு

chicken Kuzhambu tips | அனைவருக்கும் பிடித்தமான அசத்தலான சிக்கன் குழம்பு செய்ய சில டிப்ஸ்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்லோருமே சிக்கன் குழம்பு வைப்போம். ஆனால் சுவையாக இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த டிப்ஸ்களை படித்தால் கண்டிப்பாக சுவையான சிக்கன் குழம்பை வைத்து அசத்தலாம். சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அத்தகைய சிக்கனை சுவையாக செய்ய சில டிப்ஸ்...

1. சிக்கன் குழம்பு எலும்புடன் கூடிய சிக்கனை கொண்டு செய்யுங்கள், அப்போது குழம்பு சுவையாக இருக்கும்.
2. சிக்கன் குழம்பு செய்யும் பொழுது 1-2 உருளைக்கிழங்குகளை தோலுரித்து, நீளவாக்கில் வெட்டி, சேர்த்துக் கொள்ளலாம். இது குழம்பின் சுவையை கூட்டும்.
3. சிக்கன் குழம்பை இறக்குவதற்கு 1-2 நிமிடங்களுக்கு முன்பு, 4 தேக்கரண்டி தேங்காய் 4 முந்திரிபருப்பு, 1/2 தேக்கரண்டி கசகசா, ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் குழம்பு கெட்டியாகும் சுவையாகவும் இருக்கும்.
4. பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆகியவற்றுடன்  ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சிக்கன் குழம்பு மிகவும் மணமாக மற்றும் சுவை கூடுதலாக இருக்கும்.
5. சிக்கன் குழம்பில் தேங்காய் அரைத்து போடுவதற்கு பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி குழம்பு செய்யலாம். இது சிக்கன் குழம்பின் ருசியை அதிகப்படுத்தும்.
6. சிக்கன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் போது சிறிது நல்லெண்ணையை ஊற்றி நறுக்கிய வெங்காயம் கருவேபில்லையை போட்டு தாலித்து இறக்கினால் சாப்பிடும் போது கிரன்சீயாக ( crunchy) இருக்கும்.
First published:

Tags: Chicken Recipes, Food