முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சிக்கன் கீமா புலாவ்... டிரை பண்ணி பாருங்க...!

சிக்கன் கீமா புலாவ்... டிரை பண்ணி பாருங்க...!

சிக்கன் கீமா புலாவ்

சிக்கன் கீமா புலாவ்

chicken keema Pulao | சிக்கன் போட்டு புலாவ் செஞ்சுருப்பீங்கள். ஆனால் சிக்கன் கீமா போட்டு புலாவ் செஞ்சுருக்கீங்களா? இதோ ரெசிபி...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் புலாவ் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி- 1 கப்

எண்ணெய் / நெய்- 2 டீஸ்பூன்.

சிக்கன் கீமா- 250 கிராம்.

பச்சை பட்டாணி - 1/4 கப்

உருளைக்கிழங்கு -1/2 கப்

மிளகுத்தூள் - 1 ஸ்பூன்

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

வெங்காயம்- 1

தக்காளி - 1

பச்சை மிளகாய்- 2-3

மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

தனியா தூள்- 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள்- 1/2 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் புலாவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து, பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

2. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கை நறுக்கி வைத்து கொள்ளவும்.

3. பின்னர் முதலில் ஒரு தடிமனான பாத்திரத்தில் எண்ணெய் / நெய்யை ஊற்றி சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து  வதக்கி, தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

4. பின்னர் கீமா மற்றும் பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.

5. பின்னர் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி நிலைக்கு வந்ததும் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து குறைந்த தீயில் மூடி, 15-18 நிமிடங்கள் வரை சமைக்கவும்.

6. இதனை தொடர்ந்து மூடியை திறந்து வெட்டி வைத்துள்ள கொத்தமல்லி இலைகள் மற்றும் நெய்சேர்த்து கிளறி பரிமாறவும்.

First published:

Tags: Chicken Recipes