முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டேஸ்டியான சிக்கன் கீமா பிரியாணி செய்ய ரெசிபி...

டேஸ்டியான சிக்கன் கீமா பிரியாணி செய்ய ரெசிபி...

சிக்கன் கீமா பிரியாணி

சிக்கன் கீமா பிரியாணி

chicken keema recipe | கோடைகாலம் என்பதால், சிக்கனை சரியான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். உறைந்த சிக்கனை ஒருபோதும் தண்ணீரில் போடாதீர்கள். அது சுவையை இழக்க செய்துவிடும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் கீமா என்பது சுவையான உணவு வகைகளில் ஒன்றாகும். ஆனால் கீமா செய்யும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. முதலாவதாக, கீமா செய்யும் சிக்கன் முடிந்தவரை புதியதாக இருக்க வேண்டும். தற்போது பலரும் சிக்கனை வாங்கி பிரிட்ஜ்-ல் வைத்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

இரண்டாவதாக, தற்போது கோடைகாலம் என்பதால், அதை சரியான வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். உறைந்த சிக்கனை ஒருபோதும் தண்ணீரில் போடாதீர்கள், அது சுவையை இழக்க செய்யும். மூன்றாவதாக, சிக்கன் நன்கு துண்டு துண்டாக வெட்டப்பட வேண்டும். மேலும் சமைக்கும் போது கரடு முரடாகவும் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்

சிக்கன் - அரை கிலோ (கொத்திய கறி)

வெங்காயம் - 1

தக்காளி - 1

கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்

பிரியாணி இலை, பட்டை - சிறிது

தயிர் - 1/2 கப்

மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்

பாசுமதி அரிசி - 3 கப்

கிராம்பு - 4

ஏலக்காய் - 4

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி

செய்முறை :

1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டையை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

2. வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனிடையே சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதில், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

4. தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி வதக்க வேண்டும்.

5. இறுதியாக உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதனுடன் பாசுமதி அரிசியை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.

6. வெந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தூவினால் சுவையான சிக்கன் கீமா பிரியாணி ரெடி.

First published:

Tags: Biriyani, Chicken