சிக்கனில் பலவிதமான உணவுகளை செய்யலாம். அதில் முட்டையையும் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும். வைட்டமின்கள் நிறைந்த முட்டை கருவுறுதலுக்கான வாய்ப்பை அதிகரிக்க உதவுகிறது. அவற்றில் ஒமேகா 3 மற்றும் கோலைன் உள்ளது. கருவுறுதலை மேம்படுத்துவதோடு பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கிறது. அந்த வகையில் சிக்கன் முட்டை சாப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
சிக்கன் - அரை கிலோ
காய்ந்த மிளகாய் - நான்கு
தனியா (மல்லி விதை) - ஒரு மேசைக் கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
முட்டை - நான்கு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை நன்கு வேக வைத்து அதில் உள்ள மஞ்சள் கருவை நீக்கி விட்டு அதனை இரண்டாக வெட்டிக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், மிளகு, பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், தனியா ஆகிய அனைத்தையும் மசாலா பதத்தில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை ஆகிய இவற்றை போட்டு நன்கு தாளிக்கவும். இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து உடன் சிக்கனையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.மசாலாவும், சிக்கனும் சேர்ந்து நன்கு கெட்டியானதும், நீங்கள் முன்பு வெட்டி வைத்த முட்டையை உடன் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கிளறிய பிறகு சில நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்திருந்து இறக்கவும். இதோ சுவையான சிக்கன் முட்டை சாப்ஸ் ரெடி.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.