ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சிக்கன் தோசை செய்ய ரெசிபி...

சிக்கன் தோசை செய்ய ரெசிபி...

சிக்கன் தோசை

சிக்கன் தோசை

Chicken Dosa | குழந்தைகள் விரும்பும் சிக்கன் தோசையை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பொதுவாக தோசை என்றாலே நம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதில் சிக்கன் போட்டால் எப்படி இருக்கும். இந்த பதிவில் சிக்கன் தோசை செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

சிக்கன் கொத்துக்கறி - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிள்காய் தூள் - 2 டீஸ்பூன்

பச்சைமிளகாய் - 1

கரம்மசாலாத்தூள் - 1 சிட்டிகை

எண்ணெய், உப்பு - தேவைக்கு

முட்டை - 1

தோசை மாவு - 1 கப்

செய்முறை:

1. கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளியை சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாவும் போட்டு நன்றாக  வதக்கவும்.

2. பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கி உப்பு தண்ணீர் சேர்த்து வேகவிட்டு சுருண்டு வந்ததும் இறக்கவும்.

3. தோசைக்கல்லை காயவைத்து மாவை கனமான தோசையாக வார்த்து அதன் மேல் கொத்துக்கறி கலவையை பரப்பி அதன் மேல் முட்டையை அடித்து ஊற்ற வேண்டும்

4. பின்னர் சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். இப்போது சுவையான சிக்கன் தோசை ரெடி.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chicken Recipes, Food