ரெம்ப ஈஸியாக அதே நேரத்தில் சுவையாக இருக்கும் ஒரு குழம்பை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வெந்தய குழம்பு செய்யுங்கள். சீக்கிரமாகவும் ருசியாகவும் செய்துடலாம். வெந்தய குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் சுலபமானது.
தேவையானப் பொருட்கள்
பூண்டு – 30 பல்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 1
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 /2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வறுத்து அரைப்பதற்கு
மல்லி - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
1. முதலில் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை.
3. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
5. வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
6. தக்காளி வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
7. பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
8. அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்
9. இப்போது வெல்லம் சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
10. சூப்பரான செட்டிநாடு பூண்டு குழம்பு தயார்
குறிப்பு: இந்த வெந்தய குழம்பில் வெண்டைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை போட்டு செய்தால், குழம்பு இன்னும் ருசியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food