• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • செட்டிநாடு ஸ்டைல் முருங்கைக்காய் வறுவல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்டைல் முருங்கைக்காய் வறுவல் செய்வது எப்படி?

முருங்கைக்காயில் வறுவல் செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

  • Share this:
முருங்கைக்காய் அனைத்து மக்களாலுமே விரும்பி உண்ணப்படும் ஒரு காய் ஆகும். முருங்கைக்காய் வறுவல் செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய்-3

சின்ன வெங்காயம்-10

தக்காளி-1

கடுகு-1/4 ஸ்பூன்

மிளகாய் தூள்-1 ஸ்பூன்

மஞசள்தூள்-1/2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை- சிறிதளவு



செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு பொறிய விட வேண்டும். பின்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும், பிறகு, தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின், மஞ்சள்தூள், மிளகாய் தூள் தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் முருங்கைக்காயை போட்டு நன்கு வதக்கவும். பின்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி கொதிக்க வைத்து எடுக்கவும். பின்பு தண்ணீர் நன்கு வற்றிய பின்னர் நன்றாக கிளறி இறக்கினால் சுவையான செட்டுநாடு முருங்கைக்காய் வறுவல் ரெடி.

மேலும் படிக்க... கல்யாண வீட்டு உருளைகிழங்கு பால் கறி ரெசிபி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: