• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அதிகமான புரதச் சத்தை தரும் செட்டிநாடு கோழி ரசம்

அதிகமான புரதச் சத்தை தரும் செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

செட்டிநாடு கோழி ரசம்

தென் மாவட்டங்களில் ரசம் இன்றி உணவு உண்ண மாட்டார்கள். குழந்தைகளும் ரசம் போட்டுதான் சாப்பிடுவார்கள். அத்தகைய ரசத்தை அவர்களுக்கு பிடித்த கோழிக் கறியில் செட்டிநாடு ஸ்டைலில் வைத்து கொடுத்தால் ருசியாக இருக்கும். 

  • Share this:
ரசம் கண்டிப்பாக மத்திய உணவில் தவிர்க்க முடியாத ஒன்று. தென் மாவட்டங்களில் ரசம் இன்றி உணவு உண்ண மாட்டார்கள். குழந்தைகளும் ரசம் போட்டுதான் சாப்பிடுவார்கள். அத்தகைய ரசத்தை அவர்களுக்கு பிடித்த கோழிக் கறியில் செட்டிநாடு ஸ்டைலில் வைத்து கொடுத்தால் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

பட்டை - 2

புளி - 2 நெல்லிக்காய் அளவு

தனியாத் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

இலவங்கம் - 2

ஏலக்காய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெங்காய விழுது - 200 கிராம்

தக்காளி - 100 கிராம்

கருவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்து துண்டுகள் ஆக்கவும். மறுபுறம் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம் ஆகியவை சேர்த்து நன்கு தாளிக்கவும். பின்னர் கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு கருவேப்பில்லை ஆகிய அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நன்கு வதக்கவும்.

இப்போது தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவற்றுடன் சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும். சிக்கன் நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விடவும். பின்னர் புளியைக் கரைத்து மண் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் வெந்ததும் புளித் தண்ணீரை அதில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே அடுப்பில் வைக்கவும். பின்னர் சிக்கனை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து விடவும். நீங்கள் பரிமாறும் சமயத்தில் சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாறவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: