Home /News /lifestyle /

இவ்ளோ டேஸ்டியா சென்னா மசாலா செஞ்சா நோ சொல்ல வாய்ப்பே இல்லை!

இவ்ளோ டேஸ்டியா சென்னா மசாலா செஞ்சா நோ சொல்ல வாய்ப்பே இல்லை!

சென்னா மசாலா

சென்னா மசாலா

ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலே சென்னா மசாலா செய்ய நினைப்பவர்கள் இந்த பதிவை பாருங்கள்.

    சப்பாத்தி, பூரி, புல்கா, தோசைக்கு நான்வெஜ்க்கு அடுத்ததாக பெஸ்ட் காம்போவாக இருப்பது சென்னா மசாலா தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக சென்ன மசாலா உள்ளது. இதில் சேர்க்கப்படும் வெள்ளை கடலை உடலுக்கு புரோடினை தருகிறது. மாதத்திற்கு 2முறை இந்த கடலையை சப்பிடுவது அவ்வளவு நல்லது. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலே சென்னா மசாலா செய்ய நினைப்பவர்கள் இந்த பதிவை பாருங்கள்.

    ரோட்டு கடை குருமா இனி வீட்டிலே செய்யலாம்.. இதுதான் அதன் ரகசியம்!

    பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கட்டாயம் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை செய்யுங்கள். இந்த ரெசிபி பிரபல யூடியூப் சமையல் சேனலான ’ஈரோடு அம்மாச்சி சமையல்’ சேனலில் இடம்பெற்றுள்ளது. இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    வெள்ளை கடலை, தக்காளி, வெங்காயம், கரம் மசாலா பொருட்கள், முந்திரி, தேங்காய், பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், சீரகம், புதினா, கொத்தமல்லி, தயிர்.

    சைவ முட்டை பொரியல்.. ஒருமுறை செய்து பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்!

    செய்முறை:

    1., முதலில் சென்னாவை குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்.

    2. இப்போது குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் கரம் மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்க வெண்டும்.

    3. பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த வெங்காய கலவை, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    3. இப்போது மிளகாய் தூள், தனியா தூள் , மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போன உடனே அதில் தக்காளி அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.

    4.. இப்போது தேவையான அளவு உப்பு, புதினா சேர்க்க வேண்டும்.



    5. மிக்ஸியில் தனியாக, முந்திரி, வேக வைத்த சென்னா சிறிதளவு, தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    6. குக்கரில் கிரேவி கொதித்ததும் அதில் வேக வைத்த மொத்த சென்னாவையும் சேர்த்து, அதனுடன் தேங்காய் கலவையும் சேர்த்து கொத்தமல்லி தூவி இறுதியாக குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

    7. அவ்வளவு தான் இப்போது ஹோட்டல் சுவையில் டேஸ்டியான சென்னா மசாலா தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food items, Food recipes, Indian Masala

    அடுத்த செய்தி