Home /News /lifestyle /

செஃப் தீனா ரெசிபி: பொங்கலுக்கு இந்த ஸ்வீட் வீட்டில் செஞ்சா குட்டீஸ் செம்ம ஹாப்பி ஆயிடுவாங்க!

செஃப் தீனா ரெசிபி: பொங்கலுக்கு இந்த ஸ்வீட் வீட்டில் செஞ்சா குட்டீஸ் செம்ம ஹாப்பி ஆயிடுவாங்க!

செஃப் தீனா ரெசிபி

செஃப் தீனா ரெசிபி

பொங்கலுக்கு டைம் இருந்தால் கட்டாயம் இந்த கருப்பட்டி அல்வா ரெசிபியை செய்து பாருங்கள். விட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

    இந்த பொங்கலுக்கு ஏதாவது சூப்பரான ஸ்வீட் செய்யணும்-ன்னு ரொம்ப நாளா யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன் தரும். பண்டிகை நாட்கள் வந்து விட்டாலே பெண்கள் மனதில் இந்த கேள்வி ஓட தொடங் விடும். என்ன ஸ்வீட் செய்யலாம்? வீட்டில் வடை சுடுவது, சர்க்கரை பொங்கல் செய்வது, குலாப் ஜாமூன் செய்வது எல்லாம் பழைய ஸ்டைல். புதுசா, அதே நேரம் டேஸ்டா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் படியான ஒரு ஸ்வீட்டை செய்ய வேண்டும் என்பது தான் இன்றைய இல்லத்தரசிகளின் ஆசை. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு டைம் இருந்தால் கட்டாயம் இந்த கருப்பட்டி அல்வா ரெசிபியை செய்து பாருங்கள். விட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

    இந்த ரெசிபியை வழங்குபவர் செஃப் தீனா. இவர் யூடியூப்பில் ’தீனாஸ் கிச்சன்’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி, அதன் மூல பல ரெசிப்பிக்களை ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார். அதில் ஒரு வீடியோ தான் இந்த கருப்பட்டி அல்வா. இதன் செய்முறை விவரங்களை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கருப்பட்டி வெல்லம், தேங்காய் பால், நெய், மைதா, முந்திரி,

    செய்முறை:

    1. இந்த கருப்பட்டி அல்வா செய்ய முதலில் மைதா பாலை தயார் செய்து கொள்ள வேண்டும். அதாவது, 1 கப் மைதா மாவுடன் தேவையான அளவு தண்னீர் சேர்த்து அதை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க.. தைப்பொங்கல் 2022 : பொங்கல் தேதி, நேரம் குறித்த முழு விவரங்கள்!

    2. பின்பு அந்த மாவுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி 8 மணி நேர ஊற வைக்க வேண்டும். மாவு நன்கு ஊறிய பிறகு அதை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தால் திக்கான மைதா பால் கிடைக்கும். அந்த பாலை ஒரு நாள் இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும். மறுநாள் அதை வடிக்கட்டி எடுத்துக் கொண்டு 1 கப் மைதா பாலுக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். இப்போது அல்வா செய்வதற்கான மைதா பால் ரெடி.



    3. அடுத்தது, கடாயில் கருப்பட்டி வெல்லத்தை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ள் வேண்டும். வெல்லம் கரைந்து பதத்திற்கு வந்த பின்பு அதில் மைதா பால் ஊற்றி நெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    இதையும் படிங்க.. உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

    4. பின்பு அதில் திக்கான தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு நெய் சேர்த்து சுமார் 45 நிமிடத்திற்கு விடாமல் கிளற வேண்டும். இப்போது அல்வா பதத்திற்கு கருப்பட்டி கரைசல் வந்து விடும்.

    5. இதனுடன் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான ஆரோக்கியமான கருப்பட்டி அல்வா தயார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Food recipes, Pongal, Sweet recipes

    அடுத்த செய்தி