மாலை நேரத்தில் கொறிப்பதற்கு ஏதுமில்லை எனில் உடனே ஃபிரிஜ்ஜில் வைத்திருக்கும் மாவை எடுங்கள். பின்வரும் குறிப்புகளின்படி சமைத்துப் பாருங்கள். இதைவிட சுவையான ஸ்னாக்ஸ் வெறெதுவும் வேண்டாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு - 1 கரண்டி
தக்காளி - பாதி அளவு
வெங்காயம் - பாதி அளவு
வெள்ளரி - சிறிய துண்டு
மிளகுப் பொடி - 1/2 மேசைக் கரண்டி
சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப
புதினா சட்னி - 1 மேசைக் கரண்டி
செய்முறை
அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். (வழக்கமாக தோசை சுடுவதைப் போல்தான்).
அடுத்ததாக தோசையின் ஒரு புறத்தில் மட்டும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தூவவும். பின் ஸ்லைஸ் போல் தக்காளியை நறுக்கி அதை மேலே வைக்கவும்.
அதேபோல் வெள்ளரிக்காயையும் வைக்கவும். பின் சீஸை உங்கள் விருப்பம்போல் தூவி விடவும்.
தோசையின் மற்றொரு புறத்தில் புதினா சட்னியைத் தேய்க்கவும்.
அதன்மேல் மிளகுப் பொடியைத் தூவவும்.
தோசை வெந்ததும் புதினா தடவிய பகுதியை சீஸ் கலவை இருக்கும் பக்கமாக திருப்பி எடுக்கவும். பின் இருபுறமும் பக்குவமாக வாட்டி எடுக்கவும்.
சீஸ் தோசை தயார். அதை ஒரு பிளேட்டில் வைத்து சாண்ட்விச் போல் கத்தியால் வெட்டி சாஸ் கொண்டு சாப்பிடுங்கள்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.