• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடலில் வீக்கம், கட்டிகள் வராமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிடணும்? எதை தவிர்க்கணும்? செக்லிஸ்ட் இதோ!

உடலில் வீக்கம், கட்டிகள் வராமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிடணும்? எதை தவிர்க்கணும்? செக்லிஸ்ட் இதோ!

தக்காளி, மஞ்சள், மிளகு, டார்க் சாக்லேட், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, கீரை, செர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

  • Share this:
உடலுக்கு நன்மை தரும் உணவுகளை கண்டறிந்து, கீழே தரப்பட்ட கேடு விளைவிக்க கூடிய உணவுப் பொருட்களை அகற்ற வேண்டும்.

நமது உடலில் கட்டி, வீக்கம் போன்றவை வராமல் எதிர்த்துப் போராட விரும்பினால் முதலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகள் மற்றும் நன்மை தரும் உணவுகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உணவுப் பழகத்தால் மட்டுமே உடல் வீக்கம் ஏற்படுகிறது. இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. உடல் வீக்கத்தை குறைக்கும் உணவுகள் குறித்து இங்கு காண்போம்.

உடல் வீக்கத்தை குறைக்க மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் முக்கியமானவை என்றாலும், இவை வராமல் முன்கூட்டியே தடுக்க ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாம் FODMAP பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த சுருக்கமானது ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்களைக் குறிக்கிறது. இவை குடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் FODMAP நிறைந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. காலிபிளவர், காளான், பீன்ஸ், கேப்ஸிகம், கேரட், தக்காளி, தேன், கோதுமை, பூண்டு, சோயா உள்ளிட்டவை FODMAP நிறைந்த உணவுகளாகும். இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிறு வீக்கம், மற்றும் வாயு தொல்லை போன்ற செரிமான பிரச்சனை சிலருக்கு ஏற்படுகிறது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ அறிக்கையின்படி, வீக்கத்தை தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை:

  • முதலில் நாம் FODMAP உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

  •  எந்த உணவு நமக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

  • நம் உடலுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் உணவுகளை கண்டறிந்தவுடன், அவற்றை சாப்பிடுவதை கடுப்படுத்த வேண்டும் அல்லது முழுமையாக தவிர்த்து விட வேண்டும்.


மேற்கத்திய உணவில் கொழுப்பு, புரதம் அதிகமாகவும் மற்றும் பழங்கள், காய்கறிகள் குறைவாக உள்ளது. இந்த வகையான உணவு பழக்கத்தால் உலகெங்கிலும் ஐபிடி (IBD) பாதிப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன.

உடல் வீக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள்:

கார்போஹைட்ரேட், மைதா, கார்ன்ஃப்ளார், வெள்ளை ரொட்டி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கரி பொருட்கள், சமோசா போன்ற வறுத்த உணவுகள், சர்க்கரை, பர்கர், பஜ்ஜி, வெஜ் ரோல்ஸ், சோடா மற்றும் பிற சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள், சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, வெண்ணெய், ஐஸ்கிரீம், சீஸ் போன்ற பால் பொருட்கள், நான், ரசமலாய், ஹல்வா, லட்டு போன்ற உணவுகள் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள்:

தக்காளி, மஞ்சள், மிளகு, டார்க் சாக்லேட், கோகோ, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, கீரை, வெந்தயம், பச்சை இலைக் காய்கறிகள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பாதாம், வால்நட்ஸ் (walnuts), சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன், ஸ்ட்ராபெர்ரி, புளுபெர்ரி, செர்ரி மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரோக்கியமான உணவு நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், மனநிலையையும் ஒட்டுமொத்த வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: