ரவை உப்புமா, சேமியா உப்புமா என சாப்பிட்ட வாய்க்கு ஏதாவது வித்தியாசமாக சுவைக்க வேண்டும் என்று தோன்றினால் இந்த சப்பாத்தி உப்புமா செய்து கொடுங்கள். இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட்டாலும் காலையில் இப்படி அசத்தலாக செய்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 5
வெங்காயம் - 2 பெரியது
பச்சை மிளகாய் - 2
உப்பு, ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொப்பு
சிவப்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
பட்டாணி - 1
செய்முறை :
முதலில் ரொட்டிகளை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சிறிய துண்டுகளை உருவாக்க நீங்கள் ஒரு கத்தியை பயன்படுத்தலாம். இதற்கிடையில், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பட்டாணி மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்னர் உங்கள் சுவைக்கு ஏற்ப மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் வதக்கவும்.
மதுரை கறி தோசை முதல் கேரள மிளகாய் மட்டன் வரை.. டாப் 5 மட்டன் ரெசிபிக்கள்
இப்போது வெட்டிய ரொட்டி துண்டுகளை சேர்க்கவும். பின்னர் ரோட்டி துண்டுகளுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மூடியை எடுத்து 10 விநாடிகளுக்கு மூடி வைக்கவும், பின்னர் மீண்டும் நன்றாக கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தலையை சிறிய துண்டுகளாக அரிந்து அலங்கரித்தால் ரொட்டி உப்புமா ரெடி, சூடாக பரிமாறவும்.
இதேபோல தினை ரொட்டி உப்புமாவும் செய்யலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள். இதனை சிறிய துண்டுகளாக வெட்டி மேற்கண்ட அதே முறையில் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.