முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / டின்னருக்கு ஏற்ற காளான் குருமா.. இதுவரை செஞ்சதே இல்லையா...? இதோ ரெசிபி...

டின்னருக்கு ஏற்ற காளான் குருமா.. இதுவரை செஞ்சதே இல்லையா...? இதோ ரெசிபி...

காளான் குருமா

காளான் குருமா

இது புலாவ், பிரியாணிக்கு மட்டுமல்லாமல் கிரேவி வகைக்கும் பொருத்தமாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, நாண் ரொட்டி, இட்லி , தோசை என டின்னர் வகைகளுக்கு பக்காவான சைட் டிஷ் எனலாம்.

  • Last Updated :

வெஜ் பிரியர்களுக்கு காளான் மிகவும் பிடித்த உணவு. இது புலாவ், பிரியாணிக்கு மட்டுமல்லாமல் கிரேவி வகைக்கும் பொருத்தமாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, நாண் ரொட்டி, இட்லி , தோசை என டின்னர் வகைகளுக்கு பக்காவான சைட் டிஷ் எனலாம். அந்த வகையில் காளான் குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

காளான் - 200 கிராம்

எண்ணெய் - 3 ஸ்பூன்

கிராம்பு , பட்டை, இலை - 1

சோம்பு - 1 ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

வெங்காயம் - 2

பச்சை மிலகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

தக்காளி - 2

மஞ்சள் - 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தே. அளவு

அரைக்க :

தேங்காய் - அரை கப்

முந்திரி - 10

கசகசா - இரண்டு ஸ்பூன்

செய்முறை :

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு, இலை போட்டு வதக்கவும்.

அடுத்ததாக சோம்பு போட்டு பொறிந்ததும் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கொள்ளவும். நன்கு வதங்கி தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும்போது மிளகாய் பொடி மற்றும் தனியா தூள் சேர்த்து வதக்கவும்.

நெய் ஊற்றி தயிர் சாதம் தாளிப்பதுதான் சுஜா வருணியின் ஸ்பெஷல் : சம்மருக்கு இவங்களோட ஃபேவரட் டிஷ் இதுதானாம்..!

பச்சை வாசனை போனதும் காளானை நன்கு கழுவி அப்படியே கொட்டவும். நன்கு பிரட்டுங்கள்.

அடுத்ததாக மிக்ஸியில் தேங்காய் , முந்திரி , கசகச சேர்த்து மைய அரைக்கவும். ( கசகசாவை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் )

அதை தற்போது காளானில் கொட்டி நன்குக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நன்குக் கொதித்ததும் இறக்கி பறிமாறவும்.

First published:

Tags: Dinner Recipes, Mushroom