Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ காலிஃப்ளவர் பனீர் மசாலா : இப்படி செய்தால் அருமையாக இருக்கும்..!

சப்பாத்திக்கு பெஸ்ட் காம்போ காலிஃப்ளவர் பனீர் மசாலா : இப்படி செய்தால் அருமையாக இருக்கும்..!

காலிஃப்ளவர் பனீர் மசாலா

காலிஃப்ளவர் பனீர் மசாலா

எப்படி இட்லி , தோசைக்கு எப்போதும் சட்னி ஒரு போர் அடிக்கும் சைட்டிஷோ அதுபோல தான் சப்பாத்திக்கான சைட்டிஷூம் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பாக இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பலரிடமும் சப்பாத்தி சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. எப்படி இட்லி , தோசைக்கு எப்போதும் சட்னி ஒரு போர் அடிக்கும் சைட்டிஷோ அதுபோல தான் சப்பாத்திக்கான சைட்டிஷூம் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பாக இருக்கும். எனவே எப்போதும் போல் இல்லாமல் வித்தியாசமாக செய்ய இந்த காலிஃப்ளவர் பனீர் மசாலா செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 2, பொடியாக நறுக்கியவை

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தக்காளி - 2 பொடியாக நறுக்கியவை

பச்சை மிளகாய் - 2 நீளவாக்கில் வெட்டியது

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

காலிஃபிளவர் - 3 கப்பில் உதிர்த்து வைத்தவை

குடை மிளகாய் - 1 - பொடியாக நறுக்கியவை

பனீர் - 100 கிராம், நறுக்கியது

சோள மாவு - 1 தேக்கரண்டி

செய்முறை :

வானலியில் எண்ணெயைச் சூடாக்கி, வெண்ணெயை விட்டு, சீரகத்தைத் தாளிக்கவும்.

வெங்காயம், மிளகாயை மிருதுவாகும் வரை 3 முதல் 4 நிமிடங்கள் வரை பொரிக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

மசாலா பொடிகளையும் சேர்க்கவும். காலிஃபிளவர் சேர்த்து சிறுதீயில் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

டயட் இருப்போருக்கு காலை உணவாக சிவப்பு அவல் முசிலி : நீண்ட நேரம் பசியே எடுக்காது..!

பின்பு குடை மிளகாயைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

இறுதியாக பனீர் சேர்த்து மெதுவாக கிளறிவிடவும். கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.

கெட்டிப்பதம் வருவதற்காக கால் கப் தண்ணீரில் சோளமாவைக் கலந்து ஊற்றி வேக வைக்கவும்..கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாறவும்

First published:

Tags: Cauliflower recipe, Paneer recipes