காலிஃப்ளவர் பகோடா பலரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஸ்நாக்ஸ். பேக்கரி , ரெஸ்ட்ரண்டுகள் சென்றாலும் இதைத்தான் விரும்பி கேட்பார்கள். காலிஃப்ளவரை விரும்புவோருக்குக் கூட அதை இப்படி வறுத்து சாப்பித்தான் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் நினைத்த போதெல்லாம் காலிஃப்ளவர் பக்கோடா செய்து சாப்பிட ரெசிபி இதோ...
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1/2 கிலோ
மஞ்சள் - 1/2 tsp
ஊற வைக்க
கடலை மாவு - 1 1/2 tsp
மைதா - 1 1/2 tsp
சோள மாவு - 1 1/2 tsp
கரம் மசாலா - 1 tsp
சிவப்பு மிளகாய் தூள் - 1 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தே.அ
செய்முறை :
காலிப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.பின் தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க மசாலா கலக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின் வேக வைத்த காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டிவிட்டு கலந்துகொள்ளுங்கள். காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்கியிருக்க வேண்டும்.
பின் 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் காலிஃப்ளவர் பக்கோடா ரெசிபி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cauliflower recipe