• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

குடைமிளகாய் சட்னி செய்வது எப்படி?

குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.

  • Share this:
குடைமிளகாயில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. குடைமிளகாய் சட்னி வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள் 

குடைமிளகாய் - 2 பெரியது

பச்சை மிளகாய் - 4

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

புளி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 10

தேங்காய் சிறிய துண்டு - 1

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - சுவைக்கு

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

மேலும் படிக்க... காரசாரமான சேனைக்கிழங்கு வறுவல்...

குடைமிளகாய்


செய்முறை 

சின்ன வெங்காயம், குடைமிளகாயை நறுக்கி கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பைப் போட்டு வறுத்து எடுக்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின்னர் தேங்காய், குடைமிளகாய், வெங்காயம் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். இவை யாவும் வதங்கிய பிறகு புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.

மேலும் படிக்க... தினமும் கிரீன் டீ இத்தனை கப்தான் சாப்பிடணுமாம்....

இனி தேங்காய் சட்னியில் லெமன் ஜூஸ் சேர்த்து பாருங்கள்.... அட்டகாசமாக இருக்கும்...

அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்தால் சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

மேலும் படிக்க... கிராமத்து ஸ்டைல் காரச் சட்னி...         

பாட்டி ஸ்டைல் வறுத்து அரைத்த தக்காளி ரசம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: