குடைமிளகாய் முந்திரி போட்ட வேர்க்கடலை மசாலா : இதை அப்படியேவும் சாப்பிடலாம்..உணவுக்கும் தொட்டுக்கொள்ளலாம்..!

குடைமிளகாய் முந்திரி வேர்க்கடலை மசாலா

இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சாதத்திற்கு சைட்டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்.

 • Share this:
  இந்த உணவில் குடைமிளகாய், முந்திரி, வேர்க்கடலை ஆகியவை இருப்பதால் ஆரோக்கியமான உணவாக இருக்கும். இதை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். சாதத்திற்கு சைட்டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  குடை மிளகாய் - 2
  வேர்க்கடலை - 1/2 கப்
  முந்திரி - 1/4 கப்
  தேங்காய் எண்ணெய் - 1 tbsp
  கடுகு - 1/2 tsp
  வெந்தயம் - 1/4 tsp
  பெருங்காயத்தூள் - 1/4 tsp
  மஞ்சள் தூள் - 1/2 tsp
  காய்ந்த மிளகாய் - 1/2 tsp
  வெல்லம் - 1 tsp

  மசலா வறுத்து அரைக்க :

  கிராம்பு - 4
  தனியா - 1 tbsp
  சீரகம் - 1 tsp
  மிளகு - 1 tsp
  வெந்தயம் - 1/2 tsp
  தேங்காய் துருவியது - 1/4 கப்
  வறுத்த வேர்கடலை 2 tsp
  புளி - 20 கிராம்  செய்முறை

  முதலில் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  வேர்க்கடலையை கால் கப் தண்ணீர் வைத்து 2 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் போட்டுக்கொள்ளுங்கள்.

  முட்டை பீன்ஸ் பொரியல் எப்படி செய்வது..? ஈசியான டிப்ஸ் இதோ...

  அடுத்ததாக முந்திரி, குடைமிளகாய் சேர்த்து வதக்குங்கள். பெருங்காயத்தூள் , வேக வைத்த வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளுங்கள். குடைமிளகாய் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்குங்கள். குடைமிளகாய் அதிகமாக வெந்துவிடக் கூடாது.

  உப்பு தேவையான அளவு வெல்லம் சேர்த்து பிரட்டிவிடுங்கள். தண்ணீர் தேவைபட்டால் கொஞ்சம் போல் தெளித்துக்கொள்ளுங்கள். தட்டுப்போட்டு மூடி 5 நிமிடங்கள் சிறு தீயில் வேக வையுங்கள். இதனால் மசாலா பச்சை வாசனை போகும்.

  இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள். வேர்க்கடலை மசாலா தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: