இரவு தூங்கும் முன் பால் குடிப்பது ஆபத்தா..?

இந்நிலையில் அளவுக்கு அதிமாக பால் குடிப்பது சில அதிக பாதிப்பு அல்லாத பிரச்னைகள் அல்லது அதிக பாதிப்பைத் தரக்கூடிய புற்றுநோய் போன்ற ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அப்படி என்னென்ன பிரச்னைகள் வரும் என்று பார்க்கலாம். 

”நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் நல்லது”

  • Share this:
    பால் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதை எந்த நேரத்தில் எப்போது குடிக்க வேண்டும் என்பதும் அவசியமான ஒன்று. அந்த வகையில் இரவு தூங்கும் முன் ஒரு கிளாஸ் பால் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் பலரிடமும் உண்டு. இது நல்ல பழக்கமா..?

    பால் கால்சியம் , சோடியம் , புரோட்டீன் வைட்டமின் A, K மற்றும் B12, கொழுப்பு, அமினோ ஆசிட், ஆண்டி ஆக்ஸிடண்ட் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது. என்பதால் ஆயுர்வேத குறிப்புகளின்படி இரவு பால் குடிப்பது நல்லது என்கின்றனர். வெறும் பாலாக அல்லாமல் அதில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் இரவு தூக்கம் நிம்மதியாக இருக்கும் என்கிறது. அதேசமயம் பாலில் உள்ள அமினோ ஆசிட் இரவு குறட்டை விடும் பழக்கத்தை குறைக்க உதவும் என்கிறது.

    அதேபோல் அது நார்ச்சத்து கொண்டது என்பதால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் நல்லது என்கிறது ஆயுர்வேதம்.

    பால்


    ஆனால் மருத்துவர்களோ இரவு பால் குடிப்பது நல்லதல்ல என்கின்றனர். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ் சற்று சர்க்கரை நிறைந்தது. எனவே இரவு படுக்கைக்கு முன் குடிப்பது நல்லதல்ல. அதோடு நுரையீரல் இரவு நேரத்தில்தான் நச்சு நீக்கி வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் ஹெவியான பால் அருந்துவிட்டு படுக்கும்போது அதன் வேலையை மடைமாற்றம் செய்வதாக இருக்கும். பின் அது நச்சு நீக்கம் செய்யாமல் அருந்திய பாலை செரிமாணிக்க வைத்து அதன் ஊட்டச்சத்துகளை பிரித்து அனுப்பும் வேலைகளில் இறங்கிவிடும்.

    எனவே பகலில் உங்கள் உடலும் ஆற்றலில் இருக்கும். பால் குடிப்பதும் உடனே செரிமாணம் அடைந்துவிடும். எனவே பகலில் பால் குடிப்பதே நல்லது என்கின்றனர்.

    எதுவாக இருந்தாலும் பால் குடிப்பதால் உங்களுக்குள் என்ன மாதிரியான மாற்றங்கள் கிடைக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். இரவு பால் குடிப்பதால் உடலில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்தால் குடிக்கலாம் அல்லது சில பக்கவிளைவுகளை அனுபவித்தால் தவிர்த்துவிடுதல் நல்லது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

     

     

     
    Published by:Sivaranjani E
    First published: