தக்காளி இந்திய உணவில் இன்றியமையாத ஒன்றாகும். அதன் சுவை நாவில் ஒரு துளியேனும் தெரிந்தால்தான் அந்த உணவு முழுமையாகும். எனவேதான் தக்காளியை மட்டும் அதிகம் வாங்கும் பழக்கம் அதிகம் இருக்கும்.
அப்படி அதிகமாக வாங்கி சேமித்து வைக்கும்போது அதை முறையாக சேமிக்கிறீர்களா என்பது கேள்விக்குறி...
ஏனெனில் பலரும் தக்காளி அழுகாமல் ஃபிரெஷாக இருக்க ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கிறார்கள். ஆனால் அப்படி வைக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெர்மனியின் காட்டிஜன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில் தக்காளியை அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப வெளியிலேயே வைக்கலாமா அல்லது ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என இரு சேமிப்பு வகைகளை முன்வைத்து நடத்தியது.
அதில் இப்படி இந்த இரு முறைகளிலும் தக்காளியை சேமித்து வைத்தால் எந்த மாற்றங்களும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் அதன் சேமிப்பு நாட்களைப் பொருத்தது என்கின்றனர். அதோடு அதன் சுவை என்பது தக்காளியின் வகைகளைப் பொருத்தது என்பதையும் குறிப்பிடுகின்றனர்.
இறுதியில் தக்காளியை ஃபிட்ஜில் வைத்தாலும், அறையின் வைத்தாலும் எதிர்கால திட்டம் கருதி அதிகம் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை கைவிடுதல் நல்லது. அப்படியே வாங்கினாலும் 2 - 3 நாட்களுக்கு மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.