Home /News /lifestyle /

உங்களின் அளவுக்கு அதிகமான கோபத்திற்கு நீங்கள் சாப்பிடும் உணவுதான் காரணமாம் : எப்படி தெரியுமா?

உங்களின் அளவுக்கு அதிகமான கோபத்திற்கு நீங்கள் சாப்பிடும் உணவுதான் காரணமாம் : எப்படி தெரியுமா?

கோபம்

கோபம்

வேலை பளு, குடும்ப அமைப்பு, சுற்று சூழல் ஆகிய காரணங்களால் ஏற்கனவே நமது நடத்தையில் பல மாற்றங்கள் உண்டாகி உள்ளது. அவற்றுடன் தான் நமது உணவு பழக்கத்தால் ஏற்படும் மாற்றங்களும் சேர்ந்து விடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
நாம் சாப்பிடும் உணவில் ஏராளமான நன்மை தீமைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான உணவுகளை பொருத்தும் அவற்றின் தன்மை மாறுபடும். குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள், இனிப்பு அதிகம் உள்ள உணவுகள், காரம் உள்ள உணவுகள் ஆகிய வகைகளை கொண்டு அவை நமது உடலில் சில மாற்றங்களை ஏற்படத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்ரான்ஸ் கொழுப்புகள் என்கிற இந்த வகை கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு பாதிப்புகள் உண்டாக்க கூடும். இதில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க கூடிய தன்மை உள்ளதால் எளிதில் இதய நோய்கள் ஏற்படும்.

இன்றைய உலகின் சூழலில் நமக்கு அளவுக்கு அதிகமாக கோபம், வெறுப்பு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு கூடவே நாம் சாப்பிடும் உணவின் தன்மையை பொறுத்து நமது குணநலன்களில் மாற்றம் வருகிறது. வேலை பளு, குடும்ப அமைப்பு, சுற்று சூழல் ஆகிய காரணங்களால் ஏற்கனவே நமது நடத்தையில் பல மாற்றங்கள் உண்டாகி உள்ளது. அவற்றுடன் தான் நமது உணவு பழக்கத்தால் ஏற்படும் மாற்றங்களும் சேர்ந்து விடுகிறது.

உணவுகள் கோபத்தை ஏற்படுத்துமா?

ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலில் சில மாற்றங்கள் உண்டாக செய்கிறது. இதனால் அடிக்கடி எரிச்சல் ஏற்படுதல் மற்றும் கோபம் உண்டாகுதல் போன்ற பாதிப்புகள் நடக்கிறது. சுமார் 945 முதிர்ந்த ஆண் மற்றும் பெண்களை கொண்டு உணவு சார்ந்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மது பழக்கம், புகை பிடித்தல், வயது, பாலினம், கல்வி ஆகியவை முற்றிலும் மாறுபட்டாலும், ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் எல்லோருக்கும் சில பாதிப்புகள் உண்டாவதை கண்டறிந்து உள்ளனர்.



இந்த வகை உணவுகளை நமக்கு தெரியாமலே நாம் அதிக அளவில் சாப்பிட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் நீண்ட கால பிரச்சினைகளும் உடலில் ஏற்படும். குறிப்பாக கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து இதய நோய்களின் பாதிப்பு ஏற்படும். ஹைட்ரஜனேற்றப்பட்ட உணவுகள் என்று சொல்லப்படும் நிறைவுறாத கொழுப்புகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் உடலுக்கு தீங்கு உண்டாகும்.

அசைவ உணவு அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகள்

நாம் அன்றாடம் சாப்பிட கூடிய உணவுகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிகம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் பெருமளவு உள்ளது. உதாரணமாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற உணவுகளை உணவில் சேர்த்து கொள்கிறோம். மேலும் பேக்கேஜ் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், உறைந்த உணவுகள், அதிகம் பொறித்த உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், குக்கீஸ், மைக்ரோவேவ் பாப் கார்ன், பதப்படுத்தப்பட்ட மாவு வகைகள் போன்றவற்றிலும் அதிக ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளது.



இது போன்ற உணவு பொருட்களை சாப்பிட்டு வருவதால் உடல் பருமன் ஏற்படும், அடுத்ததாக கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். இதே நிலை தொடர்ந்தால் மன அழுத்தம் உருவாகும் மற்றும் இதய பாதிப்புகளை தரும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Hypertension

அடுத்த செய்தி