சர்ச்சை நோய் வந்துவிட்டாலே எந்த வயதினராக இருந்தாலும் வாயைக் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இனிப்பு கலந்த உணவை மட்டுமின்றி, கொழுப்புச்சத்து நிறைந்த மற்றும் சர்க்கரை அளவு கூடுதலாக உள்ள பழ வகைகளையும் தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். ஏனெனில் நீரிழிவு நோய் வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த பிரச்சனைக்கு உரிய சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளை பாதிக்கும் அளவிற்கு அபாயம் உள்ளது.
எனவே மாத்திரையுடன் கடுமையான உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் நீரழிவு நோயாளிகளுக்கு கட்டாயமானது. எனவே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவு எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய சில குறிப்பிட்ட பொருட்களை உள்ளடக்கிய உணவுமுறை மாற்றங்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் எந்தெந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களை உட்கொள்ளலாம் மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பது அடிக்கடி பல சந்தேகங்களை எழுப்ப கூடியதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பழம்தான் அன்னாசி.
மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவம் மற்றும் நீரிழிவு இயக்குநர் டாக்டர் ராஜீவ் குப்தா கூற்றுபடி, "பழங்கள் உணவிற்கான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்பட ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் சிறந்த மூலமாகும். இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.
பொதுவாக பார்த்தோமேயானால் அன்னாச்சிப்பழம் வெப்பமண்டலத்தைச் சேர்ந்த சத்தான பழமாகும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் மற்ற சில பழங்களை விட அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமிருப்பதால், இது இரத்த சர்க்கரையை பாதிக்க கூடியது. எனவே, அன்னாச்சி பழத்தை அளவோடு உட்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தும்மல் , சளி வர என்ன காரணம்..? மருத்துவர்கள் விளக்கம்!
அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இதனை அதிகம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கக்கூடும். மேலும், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் பிற ஆதாரங்களையும் உட்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள பிற நன்மைகள்:
*ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், வீக்கத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது.
* அன்னாச்சி பழம் வைட்டமின் சியின் நல்ல மூலமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
*புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
*அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை குறைக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும், கொழுப்பை குறைக்கவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.