முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சாக்லேட் சாப்பிடுவது ஒன்றை தலைவலியை தூண்டுமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

சாக்லேட் சாப்பிடுவது ஒன்றை தலைவலியை தூண்டுமா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

தலைவலி

தலைவலி

மைக்ரேன் பல விதமான காரணங்களால் ஏற்படும். சிறிய டிரிகர் கூட மைக்ரேனை அதிகப்படுத்தும். எனவே தான் மருத்துவர்கள், மைக்ரேன் காரணிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று கூறி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சாக்லேட் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டா? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுவார்கள். டார்க் சாக்லேட் சாப்பிடுவது பல விதங்களில் நன்மையாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் சாக்லேட் சாப்பிடுவதால் கூட வரலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

தலைவலி தனக்கு வந்தால் தான் தெரியும் என்று தீவிரமான தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். தலைவலி அவ்வளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும். காலையில் எழுந்து கொள்ளும் போதே தலைவலியுடன் எழுபவர்கள், அந்த நாளின் எந்த வேலையையும் செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள். சாதாரண தலைவலிக்கே இப்படி என்றால், மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலி மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

மைக்ரேன் பல விதமான காரணங்களால் ஏற்படும். சிறிய டிரிகர் கூட மைக்ரேனை அதிகப்படுத்தும். எனவே தான் மருத்துவர்கள், மைக்ரேன் காரணிகளைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், சாக்லேட் சாப்பிடுவது மைக்ரேனை ஏற்படுத்துமா, நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இங்கே பார்க்கலாம்.

உணவு தான் மைக்ரேனின் தூண்டுதலாக இருக்கிறது:

மும்பையில் உள்ள மசினா மருத்துவமனையின் உணவியல் நிபுணரான அனம் கொலண்டாஸ், உணவு தான் மைக்ரேன் தலைவலி ஏற்படக் காரணமாக இருக்கிறதாக, மைக்றேனால் பாதிக்கப்பட்டுள்ள 20% கூறியுள்ளனர் என விளக்கியுள்ளார். உணவினால் தலைவலி ஏற்படுவது என்பது குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், அவை மைக்ரேனை எவ்வாறு உண்டாக்குகின்றன, எவ்வளவு தீவிரமாக மாற்றுகின்றன என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

ரெட் வைன், காஃபி, சாக்லேட், பாலாடை, சீஸ், சித்ராஸ் பழங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள், செறிவூட்டப்பட்ட மற்றும் செயற்கை சுவையூட்டப்பட்ட உணவுகள் ஆகியவை ஒற்றைத் தலைவலியை தூண்டுவதாகக் கூறப்படுகின்றன.

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

அது மட்டுமில்லாமல் பலருக்கும் மைக்ரேனை தூண்டுவதற்கு பொதுவான காரணமாக சாக்லேட் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த உணவுகளை தவிர்த்தால் அடிக்கடி தலைவலி ஏற்படாது. அதுமட்டும் இல்லாமல் தலைவலியின் தீவிரத்தன்மை குறையும். ஆனால், சாக்லேட் உள்ளிட்ட இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அவற்றை சாப்பிட்ட 12 மணி நேரம் முதல் 24 மணிநேரத்திற்குள் மைக்ரேன் பாதிப்பு ஏற்படும் துவங்கும்.

சாக்லேட்டுக்கும், தலைவலிக்கும் இடையே உள்ள தொடர்பை ஏற்கனவே பல ஆய்வுகள் வெளிப்படுத்தியிருந்தாலும், இது எவ்வாறு ஏற்படுகிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், மைக்ரேன் ஆய்வு அறக்கட்டளையானது, சில உணவுகளை, மற்ற தூண்டும் உணவுகளுடன் இணைந்து சாப்பிடும் போது, அது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.சாக்லேட்டில் சர்க்கரை, பால், கோகோ பவுடர் மற்றும் கோகோ வெண்ணெய் போன்றவைகள் உள்ளன.

பெண்களை விட ஆண்கள் ஸ்கின் கேன்சரால் அதிகம் இறக்கின்றனர் : என்ன காரணம்..?

சாக்லேட் தயாரிக்கப்படும் மூலப்பொருளான கோகோ பீன் இயற்கையாகவே கோகோ பவுடர் மற்றும் கோகோ வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எனவே, இந்த கூறுகள் கொண்ட பொருட்களை ஒன்றிணைக்கும்போது, அவை கோகோ மாஸ் என்பதை உருவாக்குகின்றன. இதில், ஆன்டி-ஆக்சிடன்ட், இருதய பாதுகாப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்றக்கூடிய பண்புகள் உட்பட, மனித ஆரோக்கியத்துக்கு தேவையான பல விஷயங்களை கோகோ வழங்கும் என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

கூடுதலாக, கோகோவில் பீட்டா-ஃபைனிலெதிலமைன் மற்றும் காஃபின் ஆகியவையும் உள்ளன. இவை இரண்டும் சிலருக்கு தலைவலி ஏற்படக் காரணமாக இருக்கலாம். சாக்லேட் மற்றும் மைக்ரேன் தாக்குதல்களுக்கு இடையில், செரோடோனின் என்பது முக்கிய காரணியாக இருக்கலாம். ஒற்றைத் தலைவலி தாக்குதலின் போது, ​​செரோடோனின் ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டார் அதிகமாகிறது. எனவே, சாக்லேட் சாப்பிடும் போது சுரக்கும் செரோடோனின், நம் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், மைக்ரேன் ஆய்வில், இதனால் தான் தலைவலி ஏற்படுவதாக கருதப்படுகிறது.

First published:

Tags: Chocolate, Migraine Headache