உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம், 4 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.
கால்சியம் குறைப்பாட்டை ஹைபோகால்சீமியா என்று குறிப்பிடுவர். கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக, கால்சியம் சத்து என்றாலே பால் பொருட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என நினைப்பவர்கள் உண்டு. பால் பொருட்கள் அல்லாத காய்கறி, பழங்களிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.
குறிப்பாக, பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் நிறைந்துள்ளது.
பழங்களில் உள்ள கால்சியத்தின் அளவு
பீன்ஸ் 100 கிராமில் 140 மில்லி கிராம் கால்சியம் இருக்கும். பாதாம் 100 கிராம் - 260 மி.கி கால்சியம், 8 அத்தி பழங்கள் - 241 மி.கி, 100 கிராம் டோஃபு - 680 மி.கி, 30 கிராம் எள் - 300 மி.கி கால்சியம் உள்ளது. 45 கிராம் சியா விதைகள் - 300 மி.கி, ஒரு கிண்ணம் அளவுள்ள அடர் பச்சை காய்கறிகளில் - 300 மில்லி கிராம், ராகி மாவு 100 கிராம் - 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
உலர்ந்த முருங்கை தூளில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதேபோல், ப்ரோக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள், வெண்டைக்காய், ஆரஞ்சு பழங்களிலும் அதிகளவிலான கால்சியம் சத்துகள் நிறைந்திருக்கின்றன.
Also Read | உங்களுக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜியா..? கால்சியத்தை பெற உதவும் மாற்று வழிகள்!
இதேபோல், அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரம்ப நிலையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bone health, Calcium