உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் பலரும் நண்பர்கள், உறவினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என ஒராயிரம் பேரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள். கார்ப்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அரிசி சாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என அனைவரும் சொல்லும் ஒரே பதிலை சொல்வார்கள். அரிசி சாதத்தை தவிர்க்க வேண்டியது நல்லது தான் என்றாலும், தினை வகைகளும், சத்து நிறைந்த சிவப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை எல்லாம் வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?
வெள்ளை அரிசிக்கு பதிலாக நீங்கள் சிவப்பு அல்லது பழுப்பு அரிசியை எடுத்துக்கொள்ள முடிவெடுக்கிறீர்கள் என்றால், அடுத்து உங்கள் முன்பு ஒரு மில்லியன் டாலர் கேள்வி வைக்கப்படும். இரண்டில் எது எடை குறைப்பிற்கு சிறந்த பலன் கொடுக்க கூடியது?. ஊட்டசத்து நிபுணர்களின் கருத்து படி இரண்டில் சிறந்தது எது என சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பழுப்பு, சிவப்பு அரிசியில் உள்ள சத்துக்கள்:
பிரவுன் அரிசி தவிடு நீக்கப்படாத, பட்டை தீட்டாத அரிசி ஆகும். அதனால் தான், பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது, அதிக ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. அரிசியில் உள்ள அந்தோசயினி என்ற பொருள் அதன் நிறத்தை (சிவப்பு, கருப்பு, ஊதா) தீர்மானிக்க உதவுகிறது. இந்த ஆந்தோசயினின்களில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பழுப்பு அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்களை மேலும் வளப்படுத்த உதவுகிறது. எனவே, சிவப்பு அரிசியும் ஒரு வகையான பழுப்பு அரிசி தான் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிகப்பு அரிசியில் மெக்னீசியம் அதிகம் உள்ளது, இது திசு மற்றும் எலும்பு உருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. சிவப்பு அரிசியில் நார் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்டராலின் அளவை குறைத்து ரத்தத்தை சீராக்கும் திறன் கொண்டது. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்துவது, கால்சியத்தை உடலுக்குள் உறிஞ்சுதல் போன்றவற்றிற்கும் உதவுகிறது.
Also Read : உடல் எடையை குறைக்க உதவும் 5 மசாலா பொருட்கள்
எடை குறைப்பிற்கு எது சிறந்தது?
இரண்டு வகையான அரிசிகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அளவில் இருக்கிறது. பழுப்பு அரிசி மற்றும் சிவப்பு அரிசி இரண்டும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கம் நிறைந்ததாக இருப்பதால், இரண்டும் எடை குறைப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும் 5 சீக்ரெட் உணவுகள்!
மேலும் உணவில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களை பெறவும், சுவையை மாற்றவும் சிவப்பு மற்றும் பழுப்பு அரிசியை ஒருநாள் விட்டு ஒருநாள் என மாற்றி கூட எடுத்துக்கொள்ளலாம். இரண்டுமே வளர்சிதை மாற்றம், கொழுப்பை குறைத்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.