முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காலை டிஃபனுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல்...15 நிமிடங்கள் போதும்..!

காலை டிஃபனுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல்...15 நிமிடங்கள் போதும்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கத்தரிக்காய் கடையல் சாம்பார் இட்லிக்கு பொருத்தமான குழம்பு. காலையில் எந்தவித டென்ஷனும் இன்றி ரிலாக்ஸாக சமைக்கலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காலை உணவு என்றாலே இட்லி தான் அனைவருக்கும் நியாபகம் வரும். இட்லி சாம்பார் சட்னி என சாப்பிட்டாலும் புதுவிதமாக இட்லிக்கு குழம்பு செய்து சாப்பிட்டால் கொஞ்சம் கூடுதல் சுவையாகவே இருக்கும்..

கத்தரிக்காய் கடையல் சாம்பார் இட்லிக்கு பொருத்தமான குழம்பு. காலையில் எந்தவித டென்ஷனும் இன்றி ரிலாக்ஸாக சமைக்கலாம்.

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 5

சிறு பருப்பு - 1/4 கப்

சின்ன வெங்காயம் - 6

தக்காளி - 1

பூண்டு - 3

மஞ்சள் பொடி - 1/4 tsp

பச்சை மிளகாய் - 5

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தே.அ

தாளிக்க

எண்ணெய் - 1 tsp

வெங்காயம் - 1

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். சிறு பருப்பை 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். அதற்குள் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளுங்கள்.

பின் குக்கரில் பருப்பை கழுவிக் கொட்டுங்கள். அடுத்ததாக கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு என அனைத்தையும் ஒன்றாகக் கொட்டி ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள். குக்கரை மூடிவிட்டு அடுப்பில் வையுங்கள்.

Read More : அரிசி மாவு செய்யும் அற்புதம்..! உணவுகளை மொறுமொறுப்பாக்குவது முதல் முக பொலிவை கூட்டுவது வரை.!

 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மத்து வைத்து கடைந்துகொள்ளுங்கள்.

பின் புளித்தண்ணீர் ஊற்றி கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

அதற்குள் இடையில் தாளிக்கக் கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் கத்தரிக்காய் கடையல் தயார்.

First published:

Tags: Brinjal, Recipe