Home /News /lifestyle /

வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி பண்ணலாம்.. முட்டை, உருளைக்கிழங்கு மட்டும் போதும்!

வெறும் 5 நிமிடத்தில் சூப்பரான டிபன் ரெடி பண்ணலாம்.. முட்டை, உருளைக்கிழங்கு மட்டும் போதும்!

டிபன் ரெசிபி

டிபன் ரெசிபி

வெறும் 5 நிமிடத்தில் இதை செய்து விடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ரெசியாக இது கட்டாயம் இருக்கும்

    காலை உணவு என்பது மிக மிக அவசியமான ஒன்று. உணவு குறித்த எந்த ஆய்வை படித்தாலும் அதில் காலை உணவை தவிர்க்க கூடாது என்ற கருத்தே அதிகம் இருக்கும். இதை ஆய்வு மூலமாக தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை.நம் வீடுகளில் அம்மாக்கள் காலை எழுந்து செய்யும் முதல் வேலை டிபன் செய்வது தான். இட்லி, தோசை, பொங்கல், உப்புமா என எதாவது ஒன்றை கட்டாயம் செய்துவிடுவார்கள். அதை சாப்பிடும் வரை விட மாட்டார்கள். டீனேஜ் பிள்ளைகள் இதை கேலி, கிண்டல் செய்வதும் வழக்கம். எப்ப பார்த்தாலும் இட்லி, தோசை தானா?

    ஆவியில் வேகக்கூடிய உணவுகளை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதனால் தான் நம் வீடுகளில் டிபன் உணவில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது தினமும் வீட்டில் நடப்பது. இது இல்லாமல் சின்ன சேஞ்சுக்கு புதுமையான டிபன் சாப்பிட வேண்டுமென்று நினைத்தால் அப்ப கட்டாயம் இந்த ரெசிபியை ட்ரை செய்யுங்கள். வெறும் 5 நிமிடத்தில் இதை செய்து விடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ரெசியாக இது கட்டாயம் இருக்கும். ’கிரிஸ் குக்கரி’ என்ற யூடியூட்ப் சேனலில் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது. வாங்க செய்முறையை பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. யூடியூபில் கலக்கும் சைவ மீன் வறுவல்.. நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு, வெங்காயம், முட்டை, சீரக தூள், எண்ணெய், உப்பு, மைதா மாவு

    செய்முறை:

    1. முதலில் உருளைக்கிழங்கை சீவிக் கொள்ள வேண்டும்.

    2. அதை தண்ணீரில் ஊற வைத்து பின்பு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.



    3. இப்போது அதனுடன் நறுக்கிய வெங்காயம், முட்டை, உப்பு, சீரக தூள், மைதா மாவு சேர்த்து மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    4. இப்போது தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி, அடை தோசை போல் சுட்டு எடுத்தால் சூப்பரான காலை டிபன் ரெடி.

    குழந்தைகள் இதை சாப்பிட்டால் எல்தியாக இருப்பார்கள் கூடவே எனர்ஜியும் கிடைக்கும். வித்தியாசமான இந்த காலை டிபன் ரெசிபியை கட்டாயம் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Egg recipes, Food recipes

    அடுத்த செய்தி