முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு நாளில் மூன்று வேளையும் உணவு சாப்பிடுவது அவசியமா..? மருத்துவ ஆய்வு விளக்கம்

ஒரு நாளில் மூன்று வேளையும் உணவு சாப்பிடுவது அவசியமா..? மருத்துவ ஆய்வு விளக்கம்

உணவு

உணவு

முறையான உணவை கட்டுப்பாடற்ற அளவில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதைக் காட்டிலும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு கொஞ்சமேனும் உடற்பயிற்சி அவசியமானது என்ற கருத்து நிலவுகிறது.

  • Last Updated :

இன்றைய அவசர உலகில் நம் வாழ்க்கை இயந்திரம் போல சுழன்று வருகிறது. இத்தகைய சூழலில், கிடைத்த நேரத்தில் கிடைத்த உணவை அவசர, அவசரமாக சாப்பிடுவதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதனால், எண்ணற்ற உடல்நலப் பிரச்சினைகள் நம் மீது போர் தொடுத்து வருகின்றன.

ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். குறிப்பாக, குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்வது அல்லது இடைப்பட்ட சமயத்தில் விரதம் இருப்பது அல்லது குறிப்பிட்ட உணவு வகைகளை தவிர்ப்பது போன்ற யோசனைகளை முன்வைக்கின்றனர்.

சமீப காலமாக இப்படியொரு கருத்தும் நிலவி வருகிறது. அதாவது, முறையான உணவை கட்டுப்பாடற்ற அளவில் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதைக் காட்டிலும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு கொஞ்சமேனும் உடற்பயிற்சி அவசியமானது என்ற கருத்து நிலவுகிறது. ஆக, நாள் முழுவதும் சுவையான உணவுகளை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு அவசியமாகிறது.

ஆனால், கலோரிகளைக் குறைத்துக் கொள்வதைக் காட்டிலும், சரியான நேரத்தில் சாப்பிடுவதே போதுமானது என்று சமீபத்திய ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

உடல் இயங்கும் விதம்:

  • நமது உடல் இயக்கம் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் இயங்குகிறது. சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தனம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல ஏற்கனவே புரோகிராமிங் செய்யப்பட்டது. இதை சர்கேடியன் (Circadian) முறை என குறிப்பிடுகின்றனர். சர்கா என்பது சூரியணை குறிக்கிறது. சர்கேடியன் என்பது நாள் ஒன்றில் சூரியணின் செயல்பாடுகளை குறிக்கிறது.
  • நாம் உண்ணும் உணவை செரிமாணம் செய்வதிலும், அதில் இருந்து சத்துகளை உறிஞ்சிக் கொள்வதிலும், ஏற்கனவே எடுத்த உணவை ஆற்றலாக மாற்றுவதிலும் இந்த சர்கேடியன் செயல்பாடு தான் முக்கிய பங்காற்றுகிறது.
  • நீரிழிவு குறித்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காலை நேரத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
  • இதனால், ஒரு நாளின் முற்பகுதியில் எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதில்லை. மேலும் செரிமாண செயல்திறனும் நன்றாக இருக்கிறது.
  • ஒரு நாளின் முற்பகுதியில் மிக அதிகமான உணவை சாப்பிட்டு விட்டு, தூங்கும் சமயத்திற்கு வெகுநேரத்திற்கு முன்பாக உணவை தவிர்ப்பது, உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
  • சரியான உணவு முறை எது

    ஒவ்வொரு நபரும் தங்கள் ஆரோக்கியத்திற்காக மற்றவர்களிடம் இருந்து வேறுபட்ட உணவு முறைகளை கடைபிடிக்கின்றனர். ஆகவே, இதுதான் சரியான நடைமுறை என வரையறுத்துக் கூறுவது சற்று கடினமாக இருக்கிறது. இருப்பினும், நாளொன்றுக்கு 3 வேளை உணவு உண்பதே உடல் நலனுக்கு சரியான அணுகுமுறை என்று தெரிவிக்கப்படுகிறது.

    புற்றுநோய் ஆபத்தை உண்டாக்கும் இந்த நான்கு எண்ணெய் வகைகளுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

    • ஒரு வேளை உணவுக்கும், அடுத்த வேளை உணவுக்கும் இடையே கண்டிப்பாக 12 மணி நேரத்திற்கு மேற்பட்ட இடைவெளி இருக்கக் கூடாது.
    • தூங்கும் நேரம் மற்றும் நள்ளிரவு நேரம் மற்றும் அதிகாலை நேரத்தில் உடலின் மெலோடனின் சுரப்பு அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் உணவை தவிர்க்க வேண்டும்.
    • அவ்வபோது விரதம் இருப்பதால் நமது உடலின் கிளைசமிக் ரெஸ்பான்ஸ் அதிகரிக்கும்.
top videos

    First published:

    Tags: Breakfast, Dinner Recipes, Food, Lunch