பிரட் ஆம்லெட் ரெசிபி நம் வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பிரேக் ஃபாஸ்ட். ஈஸியாகவும் இருக்கும், அதே சமயம் பள்ளி செல்லும் குழந்தைகள் பிரட் ஆம்லெட் என்றவுடன் உற்சாகமாகி விடுவார்கள். அதற்கு காரணம் இந்த பிரட் ஆம்லெட்டுடன் அவர்கள் விரும்பு சாஸ், கெட்சப் வைத்து ருசியாக சாப்பிடலாம் அதற்கு தான் . பிரட் ஆம்லெட்டில் பல வகையுண்டு. இதை ஆரோக்கியமான காலை உணவாக மாற்ற காய்கறிகளை கூட நறுக்கி அல்லது சீவி சேர்க்கலாம்.
அதே போல் எப்போதுமே, காலை உணவில் முட்டை சேர்ப்பதும் நல்லது. அந்த நாள் முழுவதும் புரோட்டின் கிடைக்கும். டேஸ்ட் கூடுதலாக கிடைக்க, பிரட்டை முன்பே வெண்ணெய் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொண்டு கூட ஆம்லெட்டில் சேர்க்கலாம். இந்த வகையான பிரட் ஆம்லெட் ரெசிபியை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி வீடியோ லட்சுமி கிச்சன் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்களை மட்டுமே வைத்து இந்த சுவையான பிரட் ஆம்லெட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க.. பருப்பு பொடி இந்த மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கோங்க.. அவ்வளவு சீக்கிரமா கெட்டு போகாது!
தேவையான பொருட்கள்:
முட்டை, பிரட், மிளகு தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தக்காளி, வெண்ணெய்.
செய்முறை:
1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ள வேண்டும்.
2. பின்பு அதனுடன் மிளகு தூள், மிளகாய் தூள், உப்பு, நறுக்கிய தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. வெறும் தக்காளி வெங்காயம் மட்டுமில்லை,இதனுடன் கேரட், முட்டை கோஸ், பீன்ஸ், சோளம் போன்றவற்றை கூட சேர்க்கலாம். இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
4. இப்போது தவாவில் வெண்ணெய் சேர்த்து அதில் பிரட் துண்டுகளை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
10 நிமிடத்தில் தோசை மாவு தயார்.
5. அடுத்தது, முட்டை கலைவையை ஆம்லெட் போல் ஊற்றி, ஒருபக்கம் வெந்தவுடன் அதன் மேல் ரோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளை வைத்து 2பக்கம் ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான டேஸ்டியான பிரட் ஆம்லெட் தயா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.