Home /News /lifestyle /

குழந்தைகள் விரும்பும் பிரெட் மஞ்சூரியன்... டேஸ்டியா செய்ய ரெசிபி இதோ...

குழந்தைகள் விரும்பும் பிரெட் மஞ்சூரியன்... டேஸ்டியா செய்ய ரெசிபி இதோ...

பிரெட் மஞ்சூரியன்

பிரெட் மஞ்சூரியன்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பிரெட் மஞ்சூரியனை செய்துகொடுங்கள்.

    பிரெட் வைத்து செய்யக்கூடிய அனைத்து சாட் உணவுகளும் ருசியாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த பிரெட் மஞ்சூரியனை செய்துகொடுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 4 துண்டுகள்
    பட்டர் - 2 tbsp
    வெங்காயம் - 2
    குடைமிளகாய் - 1
    பச்சை மிளகாய் - 2
    சில்லி சாஸ் - 2 tbsp
    டொமேடோ சாச் - 1/2 கப்
    சோயா சாஸ் - 1 tsp
    உப்பு - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    பிரெட் துண்டுகளை தவாவில் பட்டர் விட்டு சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக கட் செய்துகொள்ளுங்கள்.

    கடாய் வைத்து பட்டர் விட்டு வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

    வதங்கியதும் அதில் டொமேடோ சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ், கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்குங்கள். மசாலா நன்கு கலந்ததும் பிரெட் துண்டுகளை சேருங்கள்.

    மாலையில் சூடாக சாப்பிட உருளைக்கிழங்கு போண்டா..! இப்படி செஞ்சு பாருங்க அருமையாக இருக்கும்.

    ரோட்டுக்கடை சால்னா ரொம்ப பிடிக்குமா... அதே சுவையில் வீட்டிலும் செய்ய எளிமையான ரெசிபி இதோ...

    பிரெட் துண்டுகள் உடையாதவாறு மசாலா சேருமாறு பிரட்டுங்கள். பிரெட் மசாலாவில் ஊறி நல்ல சுவையில் வரும் அப்போது கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் நொடியில் பிரெட் சில்லி மஞ்சூரியன் தயார்.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Bread recipes

    அடுத்த செய்தி