கல்யாண வீட்டு விருந்தில் பரிமாறப்படும் பிரட் அல்வா ஸ்வீட் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த பிரட் அல்வா சில பிரியாணி கடைகளில் சிச்னேச்சர் ரெசிபியாகவும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரட் அல்வாவை வீட்டில் ட்ரை பண்ணி பார்த்து இருக்கீங்களா? இல்லை எதாவது விசேஷத்திற்கு செய்ய வேண்டும் என பிளான் போட்டு இருக்கீங்களா? அதற்கு முன்பு இந்த பதிவை பாருங்கள். ஈஸியா, டேஸ்டியா எப்படி கல்யாண வீட்டு பிரட் அல்வா செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோ யூடியூப்பில் சமையல் வீடியோக்களை வெளியிட்டு கலக்கி வரும் இந்தியன் ரெசிபீஸ் தமிழ் யூடியூப் சேனலில் இடம்பெற்று இருக்கிறது. செஃப் அபி, இந்த ரெசிபியை செய்து காட்டியுள்ளார். கல்யாண வீட்டு பிரட் அல்வா ரகசியத்தையும் பகிர்ந்துள்ளார் . வாருங்கள் பார்க்கலாம்.
பாசிப்பருப்பில் கூட தோசை வரும் தெரியுமா? கட்டாயம் ட்ரை பண்ணுங்க!
தேவையான பொருட்கள்:
பிரட், நெய், எண்ணெய், முந்திரி, பாதாம், சர்க்கரை, திராட்சை
செய்முறை:
1. முதலில் இந்த அல்வாவுக்கு பால் பிரட் துண்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் மறந்து விடாதீர்கள்.
2. எடுத்துக் கொண்ட பிரட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிட்டு ஸ்லைசாக வெட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. பின்பு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
4. இப்போது 1 கப் சர்க்கரையை கரைத்து பாகு போல் கரைத்துக் கொள்ள வேண்டும். திக்கான பதத்திற்கு வந்த உடன் அதில் பொரித்த பிரட் துண்டுகளை சேர்க்க வேண்டும்.
கொஞ்சம் கூட கசப்பே தெரியாத பாகற்காய் சுக்கா.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!
5. பின்பு பொறுமையாக அந்த பிரட் துண்டுகள் கரையும் வரை கிளற வேண்டும். இடையில் இடையில் கொஞ்சமாக நெய்யும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. கடைசியாக ஒரு கப் அளவு காய்ச்சி ஆற வைத்த பாலையும் சேர்க்க வேண்டும்.
7. பாலை சேர்த்து 5 நிமிடத்திற்கு இடைவிடாமல் கிளற வேண்டும். இறக்கும் போது வறுத்து வைத்துள்ள நட்ஸ்களை சேர்க்க வேண்டும்.
8. அவ்வளவு தான் டேஸ்டியான கல்யாண வீட்டு பிரட் அல்வா தயார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.