• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தினையில் பீட்ரூட் தோசை..! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரெசிபி இதோ...

தினையில் பீட்ரூட் தோசை..! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரெசிபி இதோ...

தினையில் பீட்ரூட் தோசை

தினையில் பீட்ரூட் தோசை

மல்டி வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், புரதங்கள், பைட்டோ கெமிக்கல்களிலும் நிறைந்துள்ளன.

  • Share this:
நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. வீட்டிலேயே தங்குவது, சுத்தமாக இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது மட்டுமே தற்போது முக்கிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.

நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் தலைமையகம் நமது குடல். நமது குடல் செயல்படும் விதம் நமது நோயெதிர்ப்பு சக்தி வலுவாகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஃபைபர் முக்கிய பங்காற்றுகிறது. விரைவில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது அவசியம். சிறு தானியமான தினையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மல்டி வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், புரதங்கள், பைட்டோ கெமிக்கல்களிலும் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராட போதுமான ஆக்ஸிஜனேற்றங்களை உங்களுக்கு வழங்கும். இதனுடன் பீட்ரூட்டை சேர்த்து சமைக்கும் போது இதிலுள்ள சத்துக்கள் மேலும் அதிகரிக்கிறது.

தினை பீட்ரூட் தோசை :

தேவையான பொருட்கள்:

சிறிய தினை - 1 கப்
பச்சைப்பயறு - 1 கப்
இஞ்சி - 1 துண்டு
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க - பீட்ரூட், கறிவேப்பிலை மற்றும் மிளகு



செய்முறை :

தினை, பாசிப்பயறு, வெந்தயத்தை ஒன்றாக எடுத்து நன்கு கழுவி 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். நன்கு ஊறிய பின்னர் இஞ்சி, உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த மாவை எடுத்து சிறிய தோசைகளாக ஊற்றி எடுத்து கொள்ளவும். இதற்கு பீட்ரூட்டைபொடி பொடியாக சீவி கொள்ளவும். பின்னர் தோசைக்கு மேலே பீட்ரூட், கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் தூவி அலங்கரித்து பரிமாறவும். உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

இந்த டிஷ்ஷிற்கு புதினா மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தி தயாரிக்கும் சட்னி கூடுதல் சுவையை தரும்.

புதினா, நெல்லிக்காய், உலர்ந்த மாதுளை விதைகள், பச்சை மிளகாய் மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை இதில் கலந்து தோசையுடன் பரிமாறவும்.

இதில் ஃபைபர் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. தினை, பாசிப்பயறு, பீட்ரூட் மற்றும் நெல்லிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நம் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தினைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

வீட்டில் தயிர் அதிகமா இருக்கா? தயிர் வச்சு வித்தியாசமான ரெசிபிய செஞ்சு அசத்துங்க!

இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. பாசிப்பயறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி, தொற்றுநோய்களை எளிதில் எதிர்த்துப் போராட உதவும். இது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையைத் அதிகரிக்கும். இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட்கள் உடலில் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவும். மேலும் நல்ல பாக்டீரியா அளவை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பீட்ரூட் உதவுகிறது. இருமல் மற்றும் சளி அறிகுறிகளை அகற்ற நெல்லிக்காய் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது, நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: