Home /News /lifestyle /

காலை டிஃபனுக்கு 10 நிமிடத்தில் செய்ய பாம்பே சட்னி : ரெசிபி இதோ...

காலை டிஃபனுக்கு 10 நிமிடத்தில் செய்ய பாம்பே சட்னி : ரெசிபி இதோ...

 பாம்பே சட்னி

பாம்பே சட்னி

சட்னியில் கொஞ்சம் சாம்பார் சுவையும் கலந்து செய்வதுதான் இந்த பாம்பே சட்னி. நிமிடத்தில் தயாராகிடும் இந்த சட்னியின் ரெசிபி

காலை பரபரப்பான வேலை சூழலுக்கு நடுவே வகை வகையாக சமைக்க முடியாது. இதனால் டிஃபனிற்கு பலருடைய தேர்வு சட்னியாகத்தான் இருக்கும். அப்படி அதே சட்னியில் கொஞ்சம் சாம்பார் சுவையும் கலந்து செய்வதுதான் இந்த பாம்பே சட்னி. நிமிடத்தில் தயாராகிடும் இந்த சட்னியின் ரெசிபி கீழே....

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பற்கள்
கடலை மாவு - 1 tbsp
வெல்லம் - 3/4 tsp
தண்ணீர் - 1 1/2 கப்
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1 tsp

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
வெந்தையம் - 1/4 tsp
சீரகம் - 1 tsp
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை :

முதலில் கடலை மாவை 1 -1/2 கப் தண்ணீரில் கட்டியாகாமல் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிந்ததும் சீரகம், வெந்தையம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என சேருங்கள்.

பின்பு இஞ்சி , பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தக்காளி பூரி செய்ய ரெசிபி...

 

வதங்கியதும் கரைத்த கடலை மாவை ஊற்றி கலக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் நன்குக் கலக்கிவிட்டு சிறு தீயில் 4- 5 நிமிடங்களுக்குக் கொதிக்கவிட்டு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பாம்பே சட்னி தயார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Breakfast, Chutney, Idli dosa batter

அடுத்த செய்தி