Home /News /lifestyle /

இதய நோய் முதல் மூளை ஆரோக்கியம் வரை.... வேக வைத்த முட்டையில் கிடைக்கும் நன்மைகள்!

இதய நோய் முதல் மூளை ஆரோக்கியம் வரை.... வேக வைத்த முட்டையில் கிடைக்கும் நன்மைகள்!

முட்டை

முட்டை

ஒரு பெரிய முட்டையில் 6 கிராம் உயர்தர புரோட்டின் மற்றும் வைட்டமின் சி தவிர தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

, egg9 அத்தியாவசிய அமினோ ஆசிட்ஸ் நிறைந்துள்ளதால் முட்டைகளை ஒரு பவர் ஹவுஸ் என்று குறிப்பிடுகிறார்கள் நிபுணர்கள். ஒரு முட்டையில் புரோட்டின், வைட்டமின் ஏ, பி 6, பி 12, இரும்பு, ஃபோலேட், அமினோ ஆசிட்ஸ், பாஸ்பரஸ் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முட்டைகளில் காணப்படும் இந்த கலவை ஊட்டச்சத்துக்கள் உடலை வலிமையாக, சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ரோகினி பாட்டீல் முட்டை ஒரு சூப்பர்ஃபுட் என்று குறிப்பிடுகிறார். ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் அடங்கி இருக்கும் சத்துக்கள் குறித்து அவர் ஷேர் செய்துள்ளார்.

* வைட்டமின் ஏ - 6 சதவீதம்
* வைட்டமின் பி5 - 7 சதவீதம்
* வைட்டமின் பி12 - 9 சதவீதம்
* பாஸ்பரஸ் - 9 சதவீதம்
* வைட்டமின் பி2 - 15 சதவீதம்
* செலினியம் - 22 சதவீதம்

இப்போது முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளில் சிலவற்றை பார்க்கலாம்..

செயல்திறன் மேம்பாடு..

ஒரு பெரிய முட்டையில் 6 கிராம் உயர்தர புரோட்டின் மற்றும் வைட்டமின் சி தவிர தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் முட்டைகளில் காணப்படும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள், உடலால் உற்பத்தி செய்ய முடியாத புரதத்தின் கட்டுமானத் தொகுதிகளால் நிறைந்துள்ளன. முட்டையில் உள்ள ஃபோலேட், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்டவை குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. முட்டையில் இருக்கும் வைட்டமின் டி எலும்பு வலிமைக்கு, வைட்டமின் ஏ கண்களுக்கு, வைட்டமின் பி-6 மூளை வளர்ச்சிக்கு, பி12 ரத்த சோகைக்கும் நல்லது.



இதய நோய்களில் இருந்து காக்கும்..

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் கடந்த ஆண்டு வெளியான ஆய்வில், ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை சாப்பிடுவது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது அகால மரணம் ஆகிய அபாயங்களுடன் தொடர்புடையது அல்ல என்று கூறப்பட்டது. மற்றொரு ஆய்வு தினமும் ஒரு முட்டை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளது.

சீக்கிரமே முளைவிடும் உருளைக்கிழங்குகளை நீண்ட நாட்களுக்கு எப்படி சேமித்து வைப்பது.. ? செஃப் சொல்லும் ரகசியம்..!

மூளை ஆரோக்கியம்..

கருவிலிருக்கும் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் வயது முதிர்வு காலத்தில் நினைவாற்றல் செயல்பாட்டை எளிதாக்கும் கோலின் (Choline) என்ற சத்து முட்டையில் இருக்கிறது. இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நல்ல கொழுப்பின் அளவை முட்டை மேம்படுத்துகிறது மற்றும் கண்கள் ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.



குழந்தைகளுக்கு..

முட்டையில் இருக்கும் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்புகள் (saturated and unsaturated fats) இரண்டின் சரியான சமநிலை குழந்தைகளுக்கு சரியான உணவாக அமைகிறது. எனவே உடல் பருமன் ஆபத்து இருப்பதாக நினைக்காமல் வேகவைத்த முட்டைகளை குழந்தைகளுக்கு தாராளமாக வழங்கலாம்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Egg, Protein

அடுத்த செய்தி