• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை பேஜோ!

குழந்தைகளுக்கு பிடித்தமான முட்டை பேஜோ!

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும் அதில் சற்று வித்தியாசமான முட்டை பேஜோ செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்....

  • Share this:
குழந்தைகளுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். இன்று முட்டையை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் முட்டை பேஜோ செய்வது எப்படி என்று  தெரிந்து கொள்ளலாம் வாங்க...

தேவையானவை:

முட்டை- 3

வெங்காயம் – 2

பூண்டு – 1

காய்ந்த மிளகாய்- 3

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

புளி – சிறிதளவு

கொத்தமல்லி இலை- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு

முட்டை


செய்முறை

முதலில் முட்டையினை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி இலை, பூண்டினை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீரில் புளியையும், உப்பையும் போட்டு தனித்தனியாக ஊறவிடவும். அதன் பின்னர் காய்ந்த மிளகாயினை வாணலியில் எண்ணெய்விட்டு வதக்கி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, அரைத்த காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். அடுத்து முட்டையின் நடுவில் சிறிதளவு வெட்டி அதனுள் வதக்கிய கலவையை வைத்து அதன்மேல் எலுமிச்சை சாறு, புளித்தண்ணீர், பொரித்த எண்ணெய், உப்பு கரைத்த தண்ணீர் தெளித்து கொத்தமல்லி இலை தூவினால் முட்டை பேஜோ ரெடி.

மேலும் படிக்க... மட்டன் மூளை வறுவல் செய்ய ரெசிபி!

சுவையான மட்டன் ரத்த பொரியல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: