முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கசப்பே தெரியாதபடி பாகற்காய் தொக்கு செய்ய டிப்ஸ் : நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்...

கசப்பே தெரியாதபடி பாகற்காய் தொக்கு செய்ய டிப்ஸ் : நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்...

பாகற்காய் தொக்கு

பாகற்காய் தொக்கு

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட பரிந்துரைப்பார்கள். ஏனெனில் அது சர்க்கரை அளவை சீராக நிர்வகிக்க உதவும்.

  • Last Updated :

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாப்பிட பரிந்துரைப்பார்கள். ஏனெனில் அது சர்க்கரை அளவை சீராக நிர்வகிக்க உதவும். எனவே அவர்களுக்கு பாகற்காயில் தொக்கு செய்து கொடுங்கள். அதுவும் கசப்பே தெரியாதபடி செய்ய ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 3

மஞ்சள் தூள் - 1/2 tsp

மிளகாய் தூள் - 2 tsp

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம்- 500 கிராம்

உப்பு - தே.அ

வறுத்து அரைக்க :

அரிசி - 2 tsp

துவரம் பருப்பு - 2 tsp

கசகசா - 1/2 tsp

தாளிக்க :

எண்ணெய் - 3 tsp

கடுகு - 1/2 tsp

உளுந்து - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

பெருங்காயத்தூள் - 1/2 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

முதலில் புளியை ஊற வைத்துவிடுங்கள்.

பின் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் மிக்ஸியில் மைய அரைத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வையுங்கள். அதில் எண்ணெய் ஊற்றுங்கள். சூடேறியதும் கடுகு, உளுத்தம் பருப்பு , சீரகம் சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள்.

இது மீன் வறுவலா? இல்லை வாழைக்காய் வறுவலா? இதோ ரெசிபி...

பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குகள். அதோடு பாகற்காயையும் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி குழைந்ததும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.

பச்சை வாசனை போனதும் புளியை நன்கு கரைத்து அந்த தண்ணீரை ஊற்றவும்.

தற்போது தட்டுப்போட்டு மூடி கொதிக்க விடுங்கள். சில நிமிடங்கள் கொதித்ததும் அதில் வெல்லத்தை உடைத்து போடுங்கள்.

பின் அடுப்பை சிறு தீயில் வைத்து கொதிக்க விடுங்கள். உங்களுக்கு தேவையான தொக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

top videos

    அவ்வளவுதான் கசப்பே தெரியாத பாகற்காய் தொக்கு தயார்.

    First published:

    Tags: Bitter gourd, Food recipes