முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிஸ்கட்டில் இப்படியொரு ஸ்வீட் பண்ணலாமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி..!

பிஸ்கட்டில் இப்படியொரு ஸ்வீட் பண்ணலாமா..? 15 நிமிடத்தில் செய்ய ரெசிபி..!

அல்வா

அல்வா

நினைத்த நேரத்தில் நீங்கள் அல்வா சாப்பிட நினைக்கிறீர்கள் எனில் 10 ரூபாய் பிஸ்கட்டில் அது சாத்தியம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அல்வா என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நெய் மணமும் அதன் இனிப்பு சுவையும் நாவை சப்பு கொட்டிக்கொண்டே சாப்பிட வைக்கும். ஆனால் அதை செய்வது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. ஆனாலும் நினைத்த நேரத்தில் நீங்கள் அல்வா சாப்பிட நினைக்கிறீர்கள் எனில் 10 ரூபாய் பிஸ்கட்டில் அது சாத்தியம். எப்படி என்று கேட்கிறீர்களா..? இந்த ரெசிபியை படியுங்கள்.

தேவையான பொருட்கள் :

பிஸ்கட் பாக்கெட் - 2

நெய் - 150 கிராம்

முந்திரி - 100 கிராம்

பால் - 1/2 லிட்டர்

செய்முறை :

உங்களுக்கு எந்த ஃபிளேவர் பிஸ்கட் பிடிக்குமோ அதை இரண்டு பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அவற்றை இரண்டு துண்டுகளாக உடைத்துக்கொள்ளுங்கள்.

பாலை தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக வரும் வரை காய்ச்சிக்கொள்ளுங்கள்.

இப்போது கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி உருகியதும் முந்திரியை தூவுங்கள். அதை பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

புரூட் சாலட் தெரியும்.. அதென்னை சிக்கன் சாலட்..? இதோ ரெசிபி..!

இப்போது கடாயில் உள்ள நெய்யில் பாதியை தனியாக கிண்ணத்தில் ஊற்றி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் உடைத்த பிஸ்கட் துண்டுகளை மீதமிருக்கும் நெய் கடாயில் போடுங்கள். அதை நெய்யிலேயே வதக்குங்கள்.

பிஸ்கட் தூளாகியதும் காய்ச்சிய பாலை அதில் ஊற்றி நன்கு கிளறுங்கள்.

கைவிடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். கட்டிகள் இல்லாமல் நன்கு கரைய வேண்டும்.

இப்போது எடுத்து வைத்துள்ள நெய் மற்றும் முந்திரி சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள். தளதளவென அல்வா பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பிஸ்கட் அல்வா தயார்.

First published:

Tags: Sweet recipes, Sweets