ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரம்ஜானுக்கு பிரியாணி மசாலா வாங்க போறீங்களா? வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்...

ரம்ஜானுக்கு பிரியாணி மசாலா வாங்க போறீங்களா? வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்...

பிரியாணி மசாலா பொடி

பிரியாணி மசாலா பொடி

Biriyani Masala | பிரியாணி செய்வதாக இருந்தால் அதனுடன் ஒரு ஸ்பூன் இந்த பிரியாணி மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சிக்கன் பிரியாணியாக இருந்தால் முக்கால் ஸ்பூன் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான் டெஸ்டியான மணம் மிகுந்த பிரியாணி செஞ்சுடலாம்...

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிரியாணியை கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும், வீட்டில் சமைத்தாலும், அதன் சுவை எப்பொழுதுமே பாய் வீட்டு பிரியாணி சுவைக்கு ஈடாகாது. காரணம் அவர்கள்  சேர்க்கும் தனிப்பட்ட மசாலாதான் அதற்கு காரணம். இந்த பதிவில் அந்த பிரியாணியில் சேர்க்கப்படும் ரகசிய மசாலா பொடியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பட்டை – 100 கிராம்,

ஏலக்காய் – 50 கிராம்,

கிராம்பு – 50 கிராம்

செய்முறை:

1. பிரியாணி மசாலா பொடியை செய்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு விஷயம் பட்டை, கிராம்பு, ஏலக்காய் பொருட்களின் அளவு  சரியானதாக இருக்க வேண்டும்.

2. இதில் சேர்க்கப்படும் பட்டை ஒரு பங்கு என்றால் அதில் அரைப்பங்கு தான் கிராம்பும் ஏலக்காயும் இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு பொருளின் அளவு கூடுதலாக இருந்தால் பிரியாணியின் சுவையும் மணமும் மாறுபடும். பாய் வீட்டு பிரியாணியை போல இருக்காது.

3. இந்த பிரியாணி மசாலா பொடியை செய்ய முதலில் இந்த 3 மசாலா பொருட்களையும்  வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். வெயிலில் காய வைக்க முடியாதவர்கள் இந்த மசாலாக்களை அடுப்பில்  வைத்து சிறிது நேரம் வறுத்து கொள்ள வேண்டும்.

பிரியாணி மசாலா

Also Read... ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் ஹலீம் கஞ்சி... ஈஸியாக செய்ய ரெசிபி...

4. பின்னர் இதனை ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். இப்படி அரைத்த பிரியாணி மசாலாவை ஒரு பேப்பரில் கொட்டி, சிறிது நேரம் ஆற வைத்து, அதன் பின்னர் ஒரு டப்பாவில் சேர்த்து மூடி போட்டு வைக்க வேண்டும்.

5. ஒரு கிலோ மட்டன் பிரியாணி செய்வதாக இருந்தால் அதனுடன் ஒரு ஸ்பூன் இந்த பிரியாணி மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சிக்கன் பிரியாணியாக இருந்தால் முக்கால் ஸ்பூன் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். இப்போது செய்யும் இந்த பிரியாணியின் சுவையே தனிதான்.

First published:

Tags: Biriyani