முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையைக் குறைக்க காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்...பிக்பாஸ் வனிதாவின் சீக்ரெட் இதுதானாம்...

உடல் எடையைக் குறைக்க காலையில் இந்த உணவை சாப்பிடுங்கள்...பிக்பாஸ் வனிதாவின் சீக்ரெட் இதுதானாம்...

ஓட்ஸ் மசாலா ஆம்ளெட்

ஓட்ஸ் மசாலா ஆம்ளெட்

பொதுவாகவே ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதில் சிறந்த பங்களிப்பை தரும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் கொழுப்பை குறைக்கும். அதோடு நீண்ட நேரத்திற்கு பசியின்மையை தக்க வைக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிக்பாஸில் அனைவரது கவனத்தை ஈர்த்த வனிதா அந்த ஃபேன் பேஸை தக்க வைக்க யூடியூப் தொடங்கினார். அது இன்று 736k பார்வையாளர்களைக் கண்டந்துள்ளது. அவர் ஒவ்வொரு நாளும் தன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் அவரின் சமையல் குறிப்புகள் நாவூற வைக்கின்றன. வீட்டுப் பெண்கள் தொடங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை இவரின் யூடியூப் பார்வையாளர்களாக இருக்கின்றனர். எனவே எப்போதும் அவர்களுக்கு ஏற்ப வீடியோக்களை பதிவிடுவார்.

சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். இதற்கான அவருடைய முயற்சிகளையும் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றுதான் அவருடைய டயட் ரெசிபி. அதாவது உடல் எடையை குறைப்போர் காலை உணவாக ஓட்ஸ் மசாலா ஆம்ளெட் சாப்பிடலாம் என ரெசிபி பகிர்ந்துள்ளார். இதைதான் அவரும் காலை உணவாக சாப்பிடுவதாக கூறியுள்ளார். பொதுவாகவே ஓட்ஸ் உடல் எடையை குறைப்பதில் சிறந்த பங்களிப்பை தரும். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் கொழுப்பை குறைக்கும். அதோடு நீண்ட நேரத்திற்கு பசியின்மையை தக்க வைக்கும். சரி வனிதா கற்றுக்கொடுக்கும் ரெசிபியை பார்க்கலாம்.

முதலில் ஒரு கப் ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். பின் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளுங்கள். அதில் இப்போது ஒரு கப் பால் ஊற்ற வேண்டும். பால் பிடிக்காது எனில் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம். இப்போது அதை நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். பின் அரை ஸ்பூன் உப்பு , மிளகுத்தூள் அரை ஸ்பூன் , வெங்காயம் 2 ஸ்பூன், தக்காளி - 1 ஸ்பூன், குடைமிளகாய் - 1 ஸ்பூன், பச்சை மிளகாய் - சிறிதளவு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

' isDesktop="true" id="658987" youtubeid="kH3XbQTwius" category="health">

அடுத்ததாக 3 முட்டையை உடைத்து நன்கு அடித்துக்கொள்ளுங்கள். இப்போது அதை ஓட்ஸ் கலவையில் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். அடுத்ததாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி சூடாக்கிக்கொள்ளுங்கள். கல் காய்ந்ததும் மிக்ஸ் செய்து வைத்துள்ள ஓட்ஸ் முட்டை கலவையை ஒரு கரண்டி ஊற்றி வட்டமாக தடவுங்கள்.

இனி நாட்டுச் சர்க்கரை வாங்க வேண்டாம் : வீட்டிலேயே கரும்பு சாறில் எப்படி செய்வது என மெட்ராஸ் சமையல் ஸ்டெஃபி சொல்லித்தராங்க...

வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வையுங்கள். இருபக்கமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் ஓட்ஸ் மசாலா ஆம்ளெட் தயார். வனிதாவின் இந்த ரெசிபியை நீங்களும் டிரை பண்ணி பாருங்க. அவசர தேவைக்குக் கூட இதை செய்து சாப்பிடலாம் என்கிறார் வனிதா.

First published:

Tags: Breakfast, Omlet, Vanitha Vijayakumar, Weight loss